சீனாவில் தம்பதிகளை உளவு பார்க்கும் மூன்றாவது கண்!! குறையாத அச்சம்!
சீனாவில் விடுதிகளில் இரகசிய கேமராக்களை பயன்படுத்தும் செயற்பாடு இன்னும் நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தங்கள் காதலன் அல்லது காதலியோடு விடுதிகளுக்கு வரும் பெரும்பாலானோரின் பாலியல் ரீதியான காட்சிகள் சமூக ஊடக தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதனை தடுக்க அல்லது கையாள பெண்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக உடைமாற்றும் அறைகளில் கூடாரம் போன்ற அமைப்பை உருவாக்கி அதனை பயன்படுத்துவது, கேமராக்களை இனங்காணப்பது தொடர்பான ஸ்மார்ட் யோசனைகளை முன்வைப்பது என பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் இவை எவையும் கைக்கொடுக்கவில்லை என்றே கூறுப்படுகிறது. சீனாவில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பதும் விநியோகிப்பதும் சட்டவிரோதமானது என்றாலும் அதனை சில ஹோட்டல் உரிமையாளர்கள் இரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதம் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டிருந்தன. இருப்பினும் இந்த அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





