எத்தியோப்பியாவில் செயலற்று இருந்த எரிமலை திடீரென வெடித்தமையால் பரபரப்பு!
எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்த எரிமலை வெடித்து சிதறியுள்ளது.
எரிமலை வெடிப்பால் மேல் எழுந்த சாம்பல்கள் ஏமன் மற்றும் ஓமன்வரை பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எத்தியோப்பியாவின் அஃபார் (Afar) பகுதியில் உள்ள ஹேலி குப்பி (Hayli Gubbi) எரிமலை நேற்று காலை வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதனால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், கால்நடை மேய்ப்பர்களின் சமூகத்திற்கு பொருளாதார தாக்கங்களை ஏற்படக்கூடும் என்று உள்ளூர் நிர்வாகி முகமது சீட் (Mohammed Seid) தெரிவித்துள்ளார்.
ஹேலி குப்பி எரிமலை இதற்கு முன்பு வெடித்தமைக்கான பதிவுகள் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




