ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட கூடும் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் ஒருவருடன் இது தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி இல்லத்திற்குச் சென்று இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியதும் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தகவலை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.