ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவிக்கு நேர்ந்த துயரம்
ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க வந்த வெளிநாட்டு மாணவி ஒருவர் அடிலெய்டில் உள்ள பூங்கா ஒன்றில் மரக்கிளை ஒன்று விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் கால்பந்து மைதானத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் இந்த விபத்து நடந்துள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை மைதானத்தை அண்மித்துள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் உடனடியாகக் கண்டறிந்து அறிக்கை வழங்குமாறு கல்வி அதிகாரிகள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறாயினும், மாணவர்களின் பாதுகாப்பு விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த விபத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணத்தால் அவரது நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இவ்வாறான நிலைமைகளைக் கட்டுப்படுத்த, பூங்காக்கள், பொது இடங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சுற்றியுள்ள பழைய மற்றும் பாதுகாப்பற்ற மரங்களை அகற்றுவது அல்லது கத்தரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.