சிங்கப்பூர் விமான நிலையத்தில் சிக்கிய பெறுமதியான மர்ம பொருள்
சிங்கப்பூர் – சாங்கி விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் 1.2 மில்லியன் டொலர் மதிப்புள்ள காண்டாமிருகக் கொம்புகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவைகளை கடத்திய வெளிநாட்டவருக்கு நேற்று முன்தின இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் வனவிலங்கு பாகங்கள் கடத்தல் தொடர்பான வழக்கில் இன்றுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய தண்டனை இது என தேசிய பூங்கா வாரியம் (NParks) தெரிவித்துள்ளது.
33 வயதான குமேட் ஸ்தெம்பிசோ ஜோயல் என்ற அவர் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவராகும். அழிந்து வரும் உயிரினங்கள் (இறக்குமதி மற்றும் ஏற்றுமதி) சட்டம் (ESA) 2006 இன் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் தண்டனை விதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் அவர் சொந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர் வழியாக லாவோஸுக்குச் பயணித்தபோது கைது செய்யப்பட்டார்.
அதாவது, குமேட் தனது சொந்த நாட்டில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து 2022ஆம் ஆண்டு சாங்கி விமான நிலைய முனையம் 1 க்கு சட்டவிரோதமாக 20 கொம்புகளை கொண்டு வந்தார் என சொல்லப்பட்டுள்ளது.
மொத்தம் 32 கிலோ எடை கொண்ட இந்த கொம்புகளில், வெள்ளை காண்டாமிருகங்களில் கொம்புகளும் இருந்தன என கூறப்பட்டுள்ளது.