காசாவில் இஸ்ரேலிய குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு கத்தார் கோரிக்கை
காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து “உடனடி, விரிவான மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு” தனது நாடு அழைப்பு விடுப்பதாக கத்தார் பிரதமர் கூறியுள்ளார்.
கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி , மற்றொரு போர்நிறுத்தத்தை எளிதாக்குவதற்கும், முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை எட்டுவதற்கும் கத்தார் தனது முயற்சிகளை தொடரும் என்று கூறியுள்ளார்.
ஒரு வார கால இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் – எகிப்து மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் கத்தாரால் நடத்தப்பட்டது – 240 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 80 இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க வழிவகுத்தது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையில் மீண்டும் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கட்டார் தொடர்ந்தும் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் பிராந்திய வலயம் முழுவதிலும் வியாபிக்கும் அபாய நிலைமை உருவாகியுள்ளது என கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.