போலி ஆவணங்களை தயாரித்து வாகனங்களை விற்பனை செய்த இருவர் கைது
பாணந்துறை பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்த இரண்டு சந்தேக நபர்களும் ஒரு சந்தேக நபரும் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 36 மற்றும் 46 வயதுடைய தம்புள்ளை மற்றும் கலேலியா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது விற்பனை செய்து அடகு வைத்த மேலும் இரு கார்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு மேலதிகமாக சந்தேகநபர்களிடம் இருந்த இரண்டு போலியான சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் துறைமுக அதிகாரசபை ஊழியர் அடையாள அட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்களை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.