96 பயணிகளுடன் சென்ற டெல்டா விமானம் அவசரமாக தரையிறங்கியது!! வைரலாகும் காணொளி
வட கரோலினாவின் சார்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் டெல்டா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்திள் அடிப்பகுதி ஓடுபாதையில் மோதியதாகவும், விமானத்தின் முன் சக்கரம் முழுமையாக நீட்டிக்கப்படவில்லை என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
96 பயணிகளுடன் சென்ற போயிங் 717 விமானம் தரையிறங்கும் கருவியை சரியாக பயன்படுத்தாமல் புதன்கிழமை நெருக்கடியின் மத்தியில் அவசரமாக தரையிறங்கியது.
இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. டெல்டாவின் கூற்றுப்படி, இரண்டு விமானிகள், மூன்று விமான பணிப்பெண்கள் மற்றும் 96 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக பயணிகள் அமைதியாகவும், பயத்துடனும் இருக்கைகளை பிடித்துக் கொண்டு அவர்கள் படும் இன்னல்களை பயணி ஒருவர் படம்பிடிக்கும் காணொளி வைரலாகி வருகிறது.
🚨#WATCH: As video inside a Delta Flight makes an emergency landing that landed with broken nose gear up
Watch incredible video showing the inside of a Boeing 717 Delta Flight 1092 during its emergency landing at Charlotte Douglas International… pic.twitter.com/31UYiTdGLp
— R A W S A L E R T S (@rawsalerts) June 28, 2023