பிரித்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிரான்சில் சுட்டுக் கொல்லப்பட்டார்
வடமேற்கு பிரான்சில் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், பிரிட்டிஷ் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் காயமடைந்ததாகவும், அவரது எட்டு வயது சகோதரி “அதிர்ச்சியில்” இருப்பதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன.
பிரான்சில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு உதவி வழங்குவதாக இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டானியில் உள்ள குயிம்பர் அருகே உள்ள செயிண்ட்-ஹெர்போட் என்ற கிராமத்தில் சனிக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.
நெதர்லாந்து பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ள சந்தேக நபரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சோகத்திற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் இரண்டு சொத்துக்களை ஒட்டிய நிலம் தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் இருந்ததாக உள்ளூர் வழக்கறிஞர் கரீன் ஹாலி கூறினார்.
சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.