இலங்கையின் தேசிய சாதனை வீரர் சுவிட்சர்லாந்தில் காணவில்லை
இலங்கையின் மும்முறை தாண்டுதல் தேசிய சாதனையாளரான ஷ்ரேஷன் தனஞ்சய சுவிட்சர்லாந்தில் காணாமல் போயுள்ளதாக இலங்கை தடகள சங்கம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் அழைப்பிதழ் தடகளப் போட்டியின் போது தடகள வீரர் காணாமல் போனதாக சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நிகழ்வின் போது தனஞ்சய மேற்கொண்ட மூன்று முயற்சிகளும் தோல்வியடைந்ததாகவும், அவர் போட்டியில் கலந்து கொண்ட பின்னர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)





