நட்புன்னா இதுதான்! த்ரிஷா – நிகிஷாவுடன் சார்மி லூட்டி: வைரலாகும் ‘Addicted’ போஸ்ட்!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளான த்ரிஷா, சார்மி கவுர் மற்றும் நிகிஷா படேல் ஆகியோரின் நட்பு நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவர்கள் மூவரும் ஒன்றாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை நடிகை சார்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள சார்மி, “Addicted to my girls” (என் தோழிகளுக்கு நான் அடிமை) என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

இதில் த்ரிஷா மற்றும் ‘புலி’ பட நடிகை நிகிஷா படேல் ஆகியோர் செம ஸ்டைலாகக் காட்சியளிக்கின்றனர்.

இவர்களின் இந்தப் பதிவு, “சினிமாத் துறையிலும் உண்மையான நட்பு சாத்தியம்” என்பதை நிரூபிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.








