பல வருடங்களுக்குப் பின் மீண்டும் சின்மயி…
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசி குமார் நடித்த “மை லார்ட்” எனும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் சைத்ரா ஆச்சார், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ஷான் ரோல்டன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் “எச காத்தா” எனும் முதல் பாடல் இன்று வெளியாகி உள்ளது.
இப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய நிலையில், பாடகி சின்மயி ஸ்ரீபதா மற்றும் பாடகர் சத்யபிரகாஷ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு திரைப்படத்தில் சின்மயி பாடிய பாடல் வெளியாகுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)





