தனுஷ் உடன் அட்ஜஸ்ட்மெண்ட்… பகீர் கிளப்பிய சீரியல் நடிகை
தனுஷ் என்னதான் திறமையான நபராக வலம் வந்தாலும், இவரைச் சுற்றி சர்ச்சைகளும் வலம்வருகின்றன.
தற்போது பிரபல நடிகை மான்யா ஆனந்த் கொடுத்த பேட்டி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
“ஸ்ரேயாஸ் என்ற பையன் எனக்கு மெசேஜ் செய்து, ஒரு ஸ்டோரி இருக்கு பண்றீங்களா என கேட்டுவிட்டு நீங்கள் ஹீரோவுடன் கமிட்மென்ட் செய்யும்படி இருக்கும் என்று சொன்னார். நான் அதெல்லாம் முடியாது என்று சொன்னேன்.

உடனே அவர் அந்த ஹீரோ தனுஷாக இருந்தாலும் கமிட்மென்ட் செய்யமாட்டீர்களா என கேட்டார். யாராக இருந்தாலும் முடியாது என சொல்லிவிட்டேன்” என்றார்.
மான்யா ஆனந்த்தின் இந்தப் பேட்டி புதிய புயலை கோடம்பாக்கத்தில் கிளப்பியிருக்கிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே தனுஷ் கம்பெனியான வுண்டர் பார் பிலிம்ஸ் பெயரில் காஸ்ட்டிங் கால் நடத்துகிறார்கள் என்று போலியாக ஒரு அறிவிப்பு வெளியானது.

அதற்கு ஸ்ரேயாஸ் உடனடியாக பதறியடித்து மறுப்பு தெரிவித்தார். ஆனால் இதற்கு அவர் ஏன் இன்னமும் அமைதியாக இருக்கிறார் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். வுண்டர் பார் விவகாரத்திலும் ஸ்ரேயாஸின் பெயர்தான் பலமாக அடிபட்டது.
இப்படி தனது மேனேஜர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குவது குறித்து தனுஷ் ஏன் அமைதியாக இருக்கின்றார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.






