சாதனை படைத்த “லோகா”வின் ஓடிடி திகதி அறிவிப்பு
’லோகா சேப்டர் 1: சந்திரா’ படத்தின் ஒடிடி வெளியீடு குறித்து உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவான லோகா படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி வெளியானது.
கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் சூப்பர் வுமன் கதையாக இப்படம் உருவாகி அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த முதல் கேரள திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற அக்டோபர் 31 ஆம் திகதி இப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளன.

(Visited 1 times, 1 visits today)





