AI தொழில்நுட்பத்தால் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – மனிதர்கள் முற்றாக நீக்கப்படலாம்!
வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தினால் உலகளவில் பெரும்பாலான மக்கள் தொழில்வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.
மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஆய்வொன்றில் மனிதர்களால் செய்யக்கூடிய 85 சதவீதமான பணிகளை ஏஐ தொழில்நுட்பத்தால் நிறைவேற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தொழில்வாய்ப்புகளை இழக்கும் நிலையை எதிர்நோக்கியுள்ள தொழிற் துறைகளை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அந்த பட்டியல் வருமாறு,


தற்போது முன்னணியாக திகழும் 40 சதவீதமான நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 03 – 05 ஆண்டுகளில் நிகழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த வகையான வேலைகள் இயல்பாகவே கருவியால் முழுமையாக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியரான AI ஆராய்ச்சியாளர் ஜின்ராங் ஜு ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





