பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பயண தடை விதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் உதவியாளர்கள் வெளிநாடு செல்வதை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியேற்றம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பான ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ), கானின் பெயரை நோ-ஃப்ளை லிஸ்டில் சேர்த்தது.
கானின் மனைவி புஷ்ரா பீபி மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“ஒவ்வொரு விஷயத்திலும் இது ஒரு நிலையான நடைமுறை. நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது,” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கான் , தன்னை பறக்க தடை பட்டியலில் சேர்த்ததற்காக அரசாங்கத்திற்கு “நன்றி” தெரிவித்தார்.