விலகி இருக்க முடிவு செய்துவிட்டேன்… லோகேஷ் அதிர்ச்சி

லோகேஷ் கனகராஜ், தென்னிந்திய திரையுலகில் வெற்றிப் படங்களின் இயக்குனராக வலம் வருபவர்.
மாநகரம் என்ற தரமான படத்தின் மூலம் அறிமுகமானவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
அதிலும் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய விக்ரம் மிகப்பெரிய அளவில் ஹிட். பின் விஜய்யுடன் மீண்டும் இணைந்து லியோ படம் எடுத்தவர் தற்போது ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி ரஜினியின் கூலி படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் கூலி படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து படம் குறித்து அப்டேட் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது போய்க்கொண்டு இருக்கும் நிலையில் கூலி புரொமோஷன் வரை சோசியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுப்பதாக பதிவு செய்துள்ளார்.