யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது! நெடுஞ்சாலையில் பரபரப்பு

இன்று காலை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஷூட்டிங்கிற்காக தன் காரில் சென்றுகொண்டிருந்தார் யோகிபாபு. அப்போது வேலூர் அருகே வாலாஜாப்பேட்டையின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது எதிர்பாரா விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள டிவைடரில் கார் மோதி இருக்கிறது.
இதில் நல்வாய்ப்பாக நடிகர் யோகிபாபு மற்றும் அவர் உடன் பயணித்தவர்கள் எந்தவித காயமும் இன்றி தப்பித்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து மற்றொரு காரில் பெங்களூரு கிளம்பி சென்றார் யோகிபாபு. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
(Visited 16 times, 1 visits today)