தோல்வியில் முடியும் 42% திருமணங்கள் : காரணம் என்ன?
திருமணம் பற்றிய எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் பரவலான ஒன்றாக காணப்பட்டாலும் தற்போது 42 சதவீத திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக ஆசிய நாடுகளை காட்டிலும் மேலைத்தேய நாடுகளில் விவாகரத்து என்பது பெரிய விடயமாக பார்க்கப்படுவதில்லை என்ற ஒரு பொதுவான கருத்து சமூக மட்டத்தில் இருந்து வருகிறது.
ஆனால் அரிதாக தற்போது மேலைத்தேய நாடுகளில் விவகாரத்தின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக புதிய ஆராய்ச்சி காட்டுகிறது.
குறிப்பாக பிரித்தானியாவில் விவாகரத்து விகிதங்கள் உண்மையில் குறைந்து வருகின்றன. 2022 விகிதம் 1971 க்குப் பிறகு மிகக் குறைவு என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உங்கள் திருமணம் முறிவை நோக்கி பயணிக்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதன் மூலம் விவாகரத்து சிக்கல்களை தீர்க்க முடியும் என வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி உங்கள் துணையுடனான தகவல் தொடர்பை கூர்ந்து கவனிக்குமாறு அவர் வலியுறுத்துகிறார். அதாவது உங்கள் துணையுடனான தகவல் தொடர்ப்பு குறைந்து வந்தால் அது நாளடைவில் நீங்கள் உணர்ச்சி ரீதியாக துண்டிக்கப்படுவதைக் குறிப்பதாக தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் மகிழ்ச்சியற்ற உறவில் இருப்பவர்கள் உணர்ச்சி ரீதியாக துண்டிக்கப்படுகிறார்கள். மேலும் அரவணைப்பு மற்றும் அன்பு போன்ற ஆரோக்கியமான உணர்வுகள் அதிக எதிர்மறை உணர்ச்சிகளால் மாற்றப்படுவதை நாங்கள் காண்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
உண்மையான கூட்டாண்மை என்பது ஒருவருக்கொருவர் உதவி செய்வதாகும். இது குழந்தை பராமரிப்பு அல்லது வீட்டு வேலைகள் போன்ற நடைமுறைப் பணிகளாக இருக்கலாம் அல்லது உணர்ச்சிபூர்வமான ஆதரவைக் குறிக்கலாம். தங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதைப் போல தம்பதிகள் உணர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உணர்வுகளில் தெளிவாக இருப்பதும், உறவு செழிக்க உங்களுக்கு என்ன தேவை என்பதைப் பற்றி விவாதிப்பதும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.