உலகம்

அதிகரித்துள்ள பதற்ற நிலை ; மோதலைக் கைவிட இஸ்ரேல்,ஈரானுக்கு உலகத் தலைவர்கள் வேண்டுகோள்

இஸ்ரேல் மீது ஈரான் தாக்கத் தொடங்கியதும், மோதலைக் கைவிட வேண்டும் என அந்த இரு நாடுகளையும் உலகத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் உள்ளனர்.

லெபனானில், ஈரான் ஆதரவுபெற்ற ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை நீடித்து வரும் வேளையில், தனது ஆதரவுபெற்ற போராளித் தலைவர்களைக் கொன்றதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக டெஹ்ரான் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) கூறியது.

இவ்வாண்டு ஏப்ரலில் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி மூலம் ஏற்கெனவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸில் ஈரானியத் தூதரகம் மீது இஸ்ரேல் வான்படை தாக்கியதற்குப் பதிலடியாக ஈரான்அந்தத் தாக்குதலைத் தொடுத்தது.தற்போது, மீண்டும் இஸ்ரேலை தாக்கத் தொடங்கி, அதனை நோக்கி ஏராளமான ஏவுகணைகளை ஈரான் பாய்ச்சி உள்ளது.

அந்தச் செய்தி அறிந்த ஐக்கிய நாடுகள் மன்றத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், மத்திய கிழக்கில் சண்டையை அதிகரிக்கும் போக்கிற்குக் கண்டனம் தெரிவித்தார்.காஸாவில் பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகளுக்கு எதிராகப் போர் நடத்தி வரும் அதேவேளை ஹிஸ்புல்லா போராளிகளையும் இஸ்ரேல் தாக்கி வருகிறது.இது மத்திய கிழக்கு வட்டாரத்தில் பூசலை மேலும் மேலும் அதிகரிப்பதாக குட்டரெஸ் கூறினார்.

“இந்த நிலைமை இத்துடன் நிறுத்தப்பட வேண்டும். போர்நிறுத்தம் செய்தே ஆகவேண்டும்,” என்று அவர் தெரிவித்து உள்ளார்.தாக்குதல் அதிகரித்து வரும் வேளையில், ஈரான் தாக்குதலில் தாக்குப்பிடித்து வரும் இஸ்ரேலுக்கு உதவுமாறு தமது ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு உள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள இயலாதது என்று அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சர் அன்டோனி பிளிங்கன் தெரிவித்து உள்ளார்.

தன் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரானுக்குப் பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் சபதம் எடுத்துள்ளது.“கடும் விளைவுகள் ஏற்படும். நாங்கள் முடிவு செய்துவிட்டோம். எங்கு, எப்போது என்று தீர்மானித்தபடி தாக்குதல் தொடுப்போம்,” என்று இஸ்ரேல் ராணுவப் பேச்சாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.இதற்கிடையே, இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலை ஹமாஸ் போராளிக் குழு பாராட்டி உள்ளது.

இந்நிலையில், ஈரானுக்குப் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஸ்பானிய பிரதமர் பெட்ரோ சான்செஸ் அவர்களில் ஒருவர். வன்செயல்களை நிறுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பாயர்பாக் தெரிவித்துள்ளார்.டெஹ்ரானை எதிர்த்துத் தாக்க தனது ராணுவப் படைகள் மத்திய கிழக்கை நோக்கிச் சென்றுள்ளதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவெல் மெக்ரான் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலுக்கும் அதன் மக்களுக்கும் எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களை ஹிஸ்புல்லா நிறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.ஈரானின் தாக்குதலை பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டாமரும் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!