கிரீஸில் 04 நாட்களாக பற்றி எரியும் காடுகள் : போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்!
கிரீஸில் கடந்த நான்கு நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், நீர்குண்டு வீசும் விமானங்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன், தீ அணைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த தீயினால் இரு உள்ளுர்வாசிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிரீஸின் வானிலை சேவையால் வெளியிடப்பட்ட செயற்கைக்கோள் வரைபடங்களின்படி, பெலோபொன்னீஸ் பிராந்தியத்தின் கொரிந்தியா பகுதியில் சுமார் 6,500 ஹெக்டேர் (16,000 ஏக்கர்) கரடுமுரடான, மலைப்பாங்கான நிலப்பரப்பு முற்றாக அழிவடைந்துள்ளது.
தேனீ வளர்ப்பவர் ஒருவர் தேனை எடுப்பதற்காக தீவைத்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.