இலங்கை: நிமல் அரசியலில் இருந்து விலகத் தயார்: நிமல் சிறிபால டி சில்வா

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயார் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பதவி விலகுவது தொடர்பில் தமக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் ஓய்வு பெற விரும்பினாலும், தனது 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் தம்முடன் இருந்தவர்கள் மீது பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். தனது அரசியல் சகாக்கள் மற்றும் ஆதரவாளர்களை கைவிடுவது கடினமான முடிவாக இருக்கும் என்றார்.
“நான் பதவி விலகுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், 35 வருடங்களாக இவர்களுடன் அரசியல் செய்து வருவதால், இவர்களை விட்டுச் செல்ல முடியாது. நான் அவர்களை விட்டு விலகலாமா வேண்டாமா என்பதுதான் எனக்குள்ள ஒரே பிரச்சினை. எனவே, இது வெற்றி அல்லது தோல்வி பற்றியது அல்ல, ”என்று அவர் கூறியுள்ளார்.
(Visited 30 times, 1 visits today)