இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் 21 நாள் போர் நிறுத்தம் – தயார் நிலையில் உலக தலைவர்கள்!
அண்டை நாடான லெபனானில் ஹெஸ்புல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வாரமாகிவிட்டது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் மீது தரைவழி தாக்குதல் நடத்தும் திட்டம் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி நேற்று (25) சூசகமாக தெரிவித்திருந்தார்.
ஹிஸ்புல்லாஹ் தாக்குதல்களினால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய 60,000 இற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வடக்கு இஸ்ரேலில் உள்ள தமது வீடுகளுக்குத் திரும்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் போது சந்தித்த உலகத் தலைவர்கள் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் 21 நாள் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
நேற்று (25) லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டனர், அதன்படி லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 620 ஆகும்.