சீனாவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள 40,000 ஆண்டுகள் பழமையான வைரஸ்!
இதுவரை அறியப்படாத 1,700 க்கும் மேற்பட்ட பண்டைய வைரஸ்கள் பனிப்பாறையில் செயலற்ற நிலையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புவி வெப்பமடைதல் குறித்த கவலைகள் இந்த வைரஸுகள் மீண்டும் உயிர்பெற வழிவகுக்கும் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேற்கு சீனாவின் திபெத்திய பீடபூமியில் உள்ள குலியா பனிப்பாறையில் ஆய்வாளர்கள் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
40,000 ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட இவ் வைரஸுகள் வெவ்வேறு காலநிலை மாற்றங்களை சந்தித்துள்ளன.
கொடிய நோய்க்கிருமிகள் பிற இடங்களில் உருகும் பெர்மாஃப்ரோஸ்ட் மூலம் வெளிப்பட்டு, சாத்தியமான வெடிப்பு பற்றிய அச்சத்தைத் தூண்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, 2016 ஆம் ஆண்டில், சைபீரிய பெர்மாஃப்ரோஸ்டில் 75 ஆண்டுகளாக உறைந்திருந்த விலங்குகளின் சடலத்திலிருந்து ஆந்த்ராக்ஸ் வித்திகள் வெளியேறின. இதனால் ஏராளமான மக்கள் நோய்வாய்பட்டனர்.
ஆனால் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ்கள் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது, ஒற்றை செல் உயிரினங்களை மட்டுமே பாதிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.