இந்திய அணியை ரோஹித் ஷர்மா வழிநடுத்துவார் – ஜெய் ஷா உறுதிப்படுத்தினார்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைத்துவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதிகாரப்பூர்வ X கணக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஜெய் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபியையும் வெல்வதற்கு ரோஹித் ஷர்மாவின் தலைமையை நம்பியிருப்பதாக அவர் அங்கு குறிப்பிடுகிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்படாஸில் நடந்த டுவென்டி 20 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இருபது ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோஹித், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மற்றும் பயிற்சியாளராக ஓய்வு பெறும் ராகுல் டிராவிட் ஆகியோரை வாழ்த்துவதற்காக ஜெய் ஷா இங்கு வந்திருந்தார்.
“இந்த வெற்றிக்குப் பிறகு அடுத்த கட்டம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி. ரோஹித் ஷர்மா தலைமையில் இரண்டு தொடர்களையும் வெல்வோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி” என்றார்.
இதேவேளை, t20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய 20-20 அணிக்கு தற்போது புதிய தலைவரை நியமிக்க வேண்டியுள்ளது.
அதற்காக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கவனம் பல வீரர்கள் மீது குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.