அறிந்திருக்க வேண்டியவை செய்தி

நிலவுக்குப் பெயர் வைப்பதற்காக மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு

நிலவுக்குப் பெயர் வைப்பதற்கான அரிய வாய்ப்பை இப்போது சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) வழங்க முடிவு செய்துள்ளது.

சர்வதேச வானியல் ஒன்றியம் பூமியின் குவாசி நிலவுக்கு ( Earth’s quasi-moon) பெயரிட உலகளாவிய போட்டியை அறிவித்துள்ளது.

வானியலாளர்கள் குவாசி-நிலாக்களை பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு கிரகத்தை சுற்றி வருவது போல் தோன்றும் ஒரு பொருளாக வரையறுக்கின்றனர்.

ஆனால் அது மிகவும் சிறியது மற்றும் உண்மையில் சந்திரனாக இருக்க முடியாது. இதுதவிர, கிரகத்தின் ஈர்ப்பு அதன் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

குவாசி-நிலாவுக்கான பெயரை தேர்ந்தெடுத்து செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சர்வதேச வானியல் ஒன்றியத்திற்கு (IAU) ஆன்லைன் மூலம் அனுப்பலாம்.

“நேம் எ குவாசி-மூன்!” என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த போட்டியில் உலகெங்கும் உள்ள மக்கள் கலந்து கொண்டு பெயரிடலாம். வானியலுடன் மக்கள் கொண்டிருக்கும் ஆழமான தொடர்புகளை முன்னிலைப்படுத்துவதை இந்த போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது.

4 சுற்றுகளாக போட்டி நடைபெற்று 10 பெயர்கள் அக்டோபரில் தேர்ந்தெடுக்கப்படும். அவற்றிக்கு வாக்குப்க பதிவு நடைபெற்று வெற்றி பெறும் பெயர் அடுத்தாண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

(Visited 34 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!