இலங்கையில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்பு
வீடு ஒன்றுக்குள் அருகில் உள்ள கிணற்றிலிருந்து இன்று (02) அதிகாலை இரண்டரை மாத குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கற்பிட்டி கந்தகுடாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





