இலங்கை

நாட்டில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை !

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கையில் நிலவும் குளிரான காலநிலை காரணமாக வைரஸ் தொற்றுக்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளம் சிறுவர்களிடையே இந்த வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக   சிரேஷ்ட வைத்திய அதிகாரி  ரவீந்திர உடகமகே குறிப்பிட்டார். குளிர் மற்றும் வறண்ட வானிலை பல்வேறு வைரஸ் தொற்றுகள் விரைவாகப் பரவுவதற்கு பங்களிப்பதாகவும், இதனால் சுவாச குழாய் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, கடுமையான தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு […]

இலங்கை செய்தி

விகாரைக்குரிய காணியில் தையிட்டி விகாரையை கட்டித்தர தயார்

  • January 20, 2026
  • 0 Comments

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டவிரோதமாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைக்கப்பட்ட விடயம் குறித்தே மக்கள் போராடுகின்றனர். இதேவேளை […]

செய்தி விளையாட்டு

270 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட கூகிள் ஜெமினி

  • January 20, 2026
  • 0 Comments

கூகிளின் செயற்கை நுண்ணறிவு(Ai) தளமான ஜெமினி(Gemini), இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தொடருடன் அதிக மதிப்புள்ள அனுசரணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ₹270 கோடி மதிப்புடையது என்றும் மூன்று தொடர்களுக்கு அதாவது 2026 முதல் 2028 நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய தொழில்நுட்பம் சார்ந்த அனுசரணைகளில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் இந்திய விளையாட்டுகளில், குறிப்பாக கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் வளர்ந்து வரும் ஆர்வத்தை உறுதிப்படுத்துகிறது, இது மிகப்பெரிய டிஜிட்டல் அணுகலையும் ரசிகர் ஈடுபாட்டையும் […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை

  • January 20, 2026
  • 0 Comments

தமிழகத்தில் ஆபரணத் தங்க விலை இன்று (20) ஒரே நாளில் பவுனுக்கு3,600 ரூபா உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதாவது, ஒரு பவுன் தங்கம் 1,11,200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்​னை​யில் இன்று காலை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபா உயர்ந்து, 13,610 ரூபாவுக்கு விற்​பனை செய்யப்பட்டது. அத்துடன் பவுனுக்கு 1,280 ரூபா உயர்ந்து, 1,08,880 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் 24 கரட் தங்​கம் பவுன்1,18,776 ரூபாவுக்கும் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

அமெரிக்க வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாது – சுவிட்சர்லாந்தி பிரான்ஸ் ஜனாதிபதி கடும் கண்டனம்

  • January 20, 2026
  • 0 Comments

அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து விதிக்கப்படும் புதிய வரிகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் இடம்பெற்ற உலகத் தலைவர்கள் மாநாட்டில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார். பிராந்திய இறையாண்மைக்கு எதிராக வரிகள் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படும்போது, அது மிகவும் கவலைக்கிடமானது என்றும் அவர் கூறினார். இதற்கு முன், கிரீன்லாந்தை சொந்தமாக்கும் தனது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை அறிவித்திருந்தார். கிரீன்லாந்து தேசியமும் உலகளாவிய […]

இலங்கை செய்தி

யாழ் போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் இன்று முதல் மீண்டும் வழமைக்கு

  • January 20, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் CT Scan பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த CT Scan இயந்திரம் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் பரிசோதனைச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இயந்திரம் பழுதடைந்திருந்த காலப்பகுதியில் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில், தற்போது சேவைகள் வழமைக்கு திரும்பியமையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும் வைத்தியசாலை நிர்வாகம், இனி இடையூறுகள் இன்றி CT Scan பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என […]

இலங்கை செய்தி

பொருளாதார மீட்சி குறித்து ஐரோப்பிய ஆணையாளருடன் பிரதமர் ஆராய்வு!

  • January 20, 2026
  • 0 Comments

சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவுடன் Jozef Síkela பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார். உலகப் பொருளாதாரமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள பிரதமர், அங்கு முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தி வருகின்றார். இந்நிலையில் உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்குச் சமாந்தரமாக மேற்படி சந்திப்பை அவர் நடத்தியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியவை வருமாறு, “ சர்வதேச பங்களிப்புக்கான ஐரோப்பிய ஆணையாளர் சப் சிகேலாவைச் […]

ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்தில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த 06 வயது சிறுமி!

  • January 20, 2026
  • 0 Comments

ஸ்பெயின் ரயில் விபத்தில் சிக்கி ஏறக்குறைய 41 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 06 வயது சிறுமி ஒருவர் தனது மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாட்ரிட் (Madrid) நகரில் லயன் கிங் (Lion King) இசை நாடகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்  இந்த விபத்தில் உயிரிழந்தனர். இதில் மேற்படி சிறுமியின் பெற்றோர், 12 வயதுடைய அண்ணன் மற்றும் உறவினர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி தலையில் அடிப்பட்ட நிலையில் […]

அரசியல் இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (20) அறிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும். இது விடயத்தில் அரசாங்கம் முடிவெடுக்க முடியாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி வீதியில் நடப்பதால் பயனில்லை – வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவை கோரி யாழில் போராட்டம்

  • January 20, 2026
  • 0 Comments

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தற்போதைய ஆளுநரான நா. வேதநாயகன், 2019ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலராக கடமையாற்றிய காலத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வரை வழங்கப்படவில்லையென போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அக்கால பகுதியில் வீட்டு திட்டங்களை பெற்ற பயனாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வரும் நிலையில் […]

error: Content is protected !!