உலகம்

காபூல் குண்டுவெடிப்பு : ஆப்கானிஸ்தானில் உள்ள சீன பிரஜைகளுக்கு எச்சரிக்கை!

  • January 21, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீன உணவகம் மீது  ISIS  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தனது குடிமக்களைப் பாதுகாப்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தொடர்பில் சீனா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் குவோ ஜியாகுன் (Guo Jiakun)  வெளியிட்டுள்ள செய்தியில், சீனா அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கிறது மற்றும் உறுதியாக எதிர்க்கிறது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அனைத்து வகையான பயங்கரவாத வன்முறைச் செயல்களையும் கூட்டாக எதிர்த்துப் போராடுவதில் ஆப்கானிஸ்தானையும் பிராந்தியத்தில் உள்ள […]

விளையாட்டு

இலங்கைக்கு பொருளாதார பலனை தருமா T-20 உலகக்கிண்ண தொடர்?

  • January 21, 2026
  • 0 Comments

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கோப்பையை இலங்கையில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் இன்று ஆரம்பமானது. இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இன்று (21) முதல் 24 வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படும். அத்துடன், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது விளையாட்டு ரசிகர்கள் இந்த […]

ஐரோப்பா

”ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு அடிப்பணிய மாட்டேன்” – ஸ்டாமர் திட்டவட்டம்!

  • January 21, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கைகளுக்கு  அடிப்பணிய மாட்டேன் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் (Keir Starmer) இன்று மீண்டும் அறிவித்துள்ளார். கிரீன்லாந்தின் எதிர்காலத்தை  அதன் மக்களும் டென்மார்க்கும் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று  மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அதேநேரம் இந்த விவகாரத்தில் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதித்துள்ளதையும் அவர் கண்டித்துள்ளார். கிரீன்லாந்து மீதான தனது நிலைப்பாட்டிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சாகோஸ் தீவுகளை மொரீஷியஸுக்கு விட்டுக்கொடுக்கும் இங்கிலாந்தின் திட்டத்தை சுட்டிக்காட்டி ட்ரம்ப் பேசியதற்கும் […]

இலங்கை செய்தி

புலம்பெயர் உறவுகளே முதலீடு செய்ய முன்வாருங்கள்: வடக்கு ஆளுநர் பகிரங்க அழைப்பு

  • January 21, 2026
  • 0 Comments

அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது உங்களுக்கான மிகச் சிறந்ததொரு வாய்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார். போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தில் பற்றி எரிந்த கார் – வைரலாகும் காணொளி!

  • January 21, 2026
  • 0 Comments

ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்தின் முனையம் 5 க்கு வெளியே கார் ஒன்று இன்று அதிகாலை தீப்பிடித்துள்ளது. பற்றி எரியும்  வாகனத்திலிருந்து கருமையான புகை வெளியேறும் காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஹீத்ரோ விமான நிலைய குழுக்கள் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் இப்போது வழக்கம் போல் இயங்குகிறது என்று ஹீத்ரோ விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.   […]

Ketti Melam Serial Meenakshi and Sundar mystery kidnap scene பொழுதுபோக்கு

உண்மை தெரிஞ்சிடும்.. சுந்தரை அப்புறப்படுத்திய மீனாட்சி!

  • January 21, 2026
  • 0 Comments

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘கெட்டி மேளம்’ சீரியலில் தற்போது சுந்தர் என்ற பிச்சைக்காரனின் வருகை கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இன்றைய எபிசோடில் ஈஸ்வரமூர்த்தியின் சந்தேகம் மீனாட்சியை நிலைதடுமாற வைத்துள்ளது. வீட்டிற்குப் பிச்சைக்காரனாக வந்திருக்கும் சுந்தரைப் பார்த்த ஈஸ்வரமூர்த்திக்கு, “இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே?” என்ற சந்தேகம் வலுக்கிறது. அழுக்கு மூட்டையாக இருக்கும் அவனது அடையாளத்தை மாற்றினால் ஒழிய உண்மை தெரியாது என நினைக்கும் ஈஸ்வரமூர்த்தி, உடனடியாக ஒரு சலூன் கடைக்காரரை வீட்டிற்கே வரவழைக்கிறார். சுந்தருக்கு ஹேர் கட் […]

இலங்கை செய்தி

அமைதிக்காக்கும் பணிகளுக்காக சென்ற விமானப்படை வீரர்கள்

  • January 21, 2026
  • 0 Comments

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக, இலங்கை விமானப்படையின் 11-வது விசேட படைப்பிரிவு இன்று (ஜனவரி 21) அதிகாலை நாட்டை விட்டுப் புறப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்தப் படைப்பிரிவிற்கு குரூப் கெப்டன் ஆசிரி பத்திரகே தலைமை தாங்குகின்றார். மொத்தம் 110 உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் புதிய அணியில், இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து விமானப்படை வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டுள்ளமை ஒரு விசேட அம்சமாகும். இதேவேளை, மத்திய ஆபிரிக்கக் குடியரசில் […]

உலகம்

வெனிசுலாவின் 07ஆவது எண்ணெய் டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

  • January 21, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் ஏழாவது எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை அமெரிக்கா நேற்று கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. தென் அமெரிக்க நாட்டின் எண்ணெய் வளத்தை ட்ரம்ப் நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாகிட்டா (Sagitta) என்ற லைபீரிய (Liberian) கொடியுடன் பயணித்த   டேங்கர் கப்பலே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்காவின் உத்தரவை மீறி பயணித்த குற்றச்சாட்டுகளின் கீழ் எவ்வித  எதிர்ப்பும் இன்றி குறித்த கப்பலை கைப்பற்றியதாக அமெரிக்க […]

பொழுதுபோக்கு

“ஹேப்பி பர்த்டே புருஷன்!” – ஒற்றை வரியில் உருகிய குஷ்பு.

  • January 21, 2026
  • 0 Comments

தமிழ் சினிமாவின் எவர்-கிரீன் ஜோடிகளில் ஒருவரான குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர். சி தங்களது 25 ஆண்டுகால இல்லற வாழ்க்கையை வெற்றிகரமாகக் கடந்து வருகின்றனர். இன்று (ஜனவரி 21) இயக்குனர் சுந்தர். சி தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக குஷ்பு பதிவிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (Twitter) பக்கத்தில், அவர்கள் இருவரும் திருமணமான புதிதில் எடுத்த மிகவும் அழகான […]

இலங்கை செய்தி

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட மேலும் 5 கட்சிகள்

  • January 21, 2026
  • 0 Comments

இலங்கையில் 2025ஆம் ஆண்டிற்காக மேலும் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 7(4) (ஆ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த புதிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. புதிதாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் விபரம்: 1. சோஷலிச மக்கள் முன்னணி (Socialist Alliance) 2. […]

error: Content is protected !!