அரசியல் இலங்கை செய்தி

அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குவது குறித்து ஆராய்வு!

  • December 15, 2025
  • 0 Comments

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. தேசிய அனர்த்த முகாமைத்துவ கூட்டுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க இலங்கை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தை திருத்துவது தொடர்பான பத்திரம் இதன் போது சமர்ப்பிக்கப்பட்டது. பல்தரப்பு அணுகுமுறை மூலம் தோட்டப் பகுதிகளில் மண்சரிவு அபாயத்தைக் குறைப்பதற்காக, NBRO உட்பட தொடர்புடைய தரப்பினர்கள், தோட்ட உரிமையாளர்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

பொண்டி துப்பாக்கிச்சூடு – ஜனாதிபதி கண்டனம்

  • December 15, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் , இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைப் பதிவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சமூகத்தில் வன்முறை மற்றும் வெறுப்புக்கு இடமில்லை என்பதை வலியுறுத்தி, அவுஸ்திரேலியாவுடன் இலங்கை தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கும் என ஜனாதிபதி மேலும் கூறினார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் நேற்றைய […]

இலங்கை

இலங்கை இராணுவத்தினரின் நெகிழ்ச்சியான செயல்!

  • December 15, 2025
  • 0 Comments

பேரிடர் நிவாரணப் பணிகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட  300,000 ரொக்கம் மற்றும் சுமார்   5 மில்லியன் ரூபாய்  மதிப்புள்ள தங்க நகைகளை இலங்கை இராணுவ வீரர்கள் அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது. ஹங்குரான்கெத்த பிரதேச செயலகப் பிரிவுக்குள் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் நடவடிக்கைகளின் போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிலச்சரிவால் முற்றிலுமாக அழிவடைந்த   வீட்டின் இடிபாடுகளில் இருந்து  பணம் மற்றும் நகை என்பன  மீட்கப்பட்டதாகவும் அவை பாதுகாப்பாக உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் […]

உலகம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தாய்லாந்து!

  • December 15, 2025
  • 0 Comments

தாய்லாந்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் பெப்ரவரி 08 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டின் தேர்தல் ஒழுங்குமுறை ஆணையம் இன்று  தெரிவித்துள்ளது. பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான பிரச்சினையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு எதிர்கட்சிகள்  அழைப்பு விடுக்க தயாரானதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பித்தார். நீண்டகால எல்லைப் பிரச்சினை தொடர்பாக தாய்லாந்து கம்போடியாவுடன் பெரிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ள நிலையில் வர இருக்கும் தேர்தல் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.  

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

டிட்வா புயல் – உலக வங்கியிடமிருந்து $120 மில்லியன் நிதியுதவி

  • December 15, 2025
  • 0 Comments

இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்கு உலக வங்கி குழு ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இந்த பேரிடரை எதிர்கொண்டு இலங்கையர்கள் காட்டிய மீள்தன்மை மற்றும் உயிர்களை காப்பாற்றவும் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் கோரிக்கையை தொடர்ந்து, உலக வங்கி குழு 120 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்குகிறது. இந்த நிதி, நடப்பு உலக வங்கி திட்டங்களில் இருந்து […]

இலங்கை

ஜப்பான் பேரிடர் நிவாரண குழுவின் பணிகள் நிறைவு – இன்று நாடு திரும்புகின்றனர்

  • December 15, 2025
  • 0 Comments

ஜப்பான் பேரிடர் நிவாரண (JDR) மருத்துவக் குழு, தங்கள் பணியை நிறைவு செய்து இன்று நாட்டிற்கு திரும்புகின்றனர். நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க 31 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் மீட்பு நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு டிசம்பர் 03 ஆம் திகதியன்று நாட்டை வந்தடைந்தனர். சிலாபம் பொலிஸ் மைதானத்தில் அவர்களால் நிறுவப்பட்ட முழுமையான வசதிகளுடன் கூடிய நடமாடும் வைத்தியசாலை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர […]

இந்தியா

ஆபத்தான காற்றின் தரத்தால் போராடும் டில்லி – கட்டுமானப் பணிகளும் தடை

  • December 15, 2025
  • 0 Comments

இந்தியாவின் புதுடில்லி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கான வகுப்புகளை நிகழ்நிலையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியத் தலைநகரம் ஆபத்தான காற்றின் தரத்துடன் போராடுவதால் கட்டுமானப் பணிகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குளிர்காலம் நிலவி வரும் நிலையில் தலைநகர் டெல்லியை அடர்த்தியான புகை மூட்டம் சூழ்ந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த பகுதிகளில் எதிரே வருபவர்கள் கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. காற்று மாசைக் குறைப்பதற்காக 40 […]

இலங்கை

640 பாடசாலைகள் மீள திறக்கப்படாது : கல்வி அமைச்சு அறிவிப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மொத்தம் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். தொடர்புடைய செய்தி    மீளவும் திறக்கப்படும் பாடசாலைகள் – சீருடைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

உலகம்

மொராக்கோவில் பெரும் வெள்ளம் – 37 பேர் உயிரிழப்பு

  • December 15, 2025
  • 0 Comments

மொராக்கோவின் அட்லாண்டிக் கடலோர மாகாணமான சஃபியில் வெள்ளம் காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த மழை காரணமாக (Safi) சஃபி நகரத்தின் வீதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 70 வீடுகள் மற்றும் வணிகங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பெர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காணாமற் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக […]

ஐரோப்பா

ஆக்ஸ்பாம் தலைமை நிர்வாகி பதவி நீக்கம்

  • December 15, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் புகழ்பெற்ற சர்வதேசத் தொண்டு நிறுவனமான ஆக்ஸ்பாமின் (Oxfam) தலைமை நிர்வாகியின் நடத்தை மற்றும் முடிவெடுப்பில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக சுயாதீன மதிப்பாய்வு கண்டறிந்ததைத் தொடர்ந்து டொக்டர் ஹலிமா பேக் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார். அவரது நடத்தை நம்பிக்கையை மீறியது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர். இந்த விசாரணைக்கு சுமார் 70 ஊழியர்கள் கடிதத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. சிலர் கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த […]

error: Content is protected !!