உலகம் செய்தி

ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிடும் இஸ்ரேல் – ட்ரம்புடன் கலந்துரையாடல்!

  • December 21, 2025
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக புதிய வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜுன் மாதத்தில் அமெரிக்கா குண்டுவீசித் தாக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளங்களை ஈரான் ஏற்கனவே மீண்டும் கட்டமைத்து வருகின்ற நிலையில், மீண்டும் தாக்குதல்களை நடத்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பலவீனமான போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாத இறுதியில் […]

உலகம்

17 வருட சிறை தண்டனை – போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான்!

  • December 21, 2025
  • 0 Comments

ஊழல் வழக்கில் தனக்கும் மனைவி புஷ்ரா பீபிக்கும் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு தழுவிய போராட்டங்களுக்குத் தயாராகுமாறு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஏப்ரல் 2022 இல் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து ஊழல் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வரும் இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சவுதி அரேபியாவிடம் இருந்து பரிசு பெற்று ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் […]

இலங்கை

காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : மக்களுக்கு அறிவுறுத்தல்!

  • December 21, 2025
  • 0 Comments

சமீபத்திய நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாகவும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) அளவுகள் அதிகரித்து வருவதாகவும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்தின் (CEA) ஊடகப் பேச்சாளர் டாக்டர் அஜித் குணவர்தன தெரிவித்தார். தற்போது AQI 150 முதல் 200 வரை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், வடகிழக்கு பருவமழை தொடங்குவதோடு எல்லை தாண்டிய காற்று இயக்கமும் இந்த நிலைமைக்கு காரணம் என்று விளக்கினார். […]

உலகம்

தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 09 பேர் மரணம்!

  • December 21, 2025
  • 0 Comments

தென்  ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) அருகே உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெக்கர்ஸ்டாலில் இரண்டு கார்களில் வந்த அடையாளம் தெரியாத 12 துப்பாக்கிதாரிகள், இன்று  இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தருவதற்கு முன் தாக்குதல்தாரிகள் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பி செல்லும்போது தாக்குதல்தாரிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தாக்குதல்தாரிகளை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.   […]

இந்தியா இலங்கை உலகம் செய்தி

ஓன்டன்செட்ரான் ஊசி சர்ச்சை: சர்வதேச பரிசோதனைக்கான முழுச் செலவையும் ஏற்கத் தயார் – இந்திய நிறுவனம் அறிவிப்பு

  • December 21, 2025
  • 0 Comments

இலங்கையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ‘ஓன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்துகளை, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதிப்பதற்கான முழுச் செலவையும் ஏற்கத் தயாராக இருப்பதாக இந்திய நிறுவனமான மான் பார்மாசூட்டிக்கல்ஸ் அறிவித்துள்ளது. இந்த மருந்தை ஏற்றிய பின்னர் இரண்டு நோயாளிகள் உயிரிழந்ததாக எழுந்த சந்தேகத்தை அடுத்து, அதன் நான்கு தொகுதிகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குறித்த மருந்துகள் உரிய வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்துவது இலங்கை அதிகாரிகளின் பொறுப்பு […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

கரத்தா விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுகிறது: சிங்கப்பூர், பாலிக்கு நேரடிப் பயணம்

  • December 21, 2025
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவின் கரத்தா (Karratha) பிராந்திய விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கான புதிய திட்டங்களை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், பில்பாரா (Pilbara) பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களும், ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்களும் இனி சிங்கப்பூர் மற்றும் பாலி போன்ற நாடுகளுக்கு நேரடியாகப் பயணிக்க முடியும். தற்போது, இப்பகுதியிலுள்ள மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல சுமார் 1,500 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பெர்த் (Perth) நகருக்குச் சென்றே விமானங்களைப் பிடிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இது […]

இலங்கை செய்தி

பெற்றோரின் உரிமைகளைப் பறிக்கும் கல்விச் சீர்திருத்தம்”: கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடும் எச்சரிக்கை

  • December 21, 2025
  • 0 Comments

“பாடசாலைப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், பெற்றோரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஹங்வெல்ல புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 6 வயது முதல் மாணவர்களுக்குப் போதிக்கப்படவுள்ள இந்த புதிய பாடத்திட்டம், மேற்கத்தைய நாடுகளின் கலாசாரச் சீரழிவுகளைத் திணிப்பதாகக் குற்றம் சாட்டினார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சில சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவிக்காக இலங்கையின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை […]

இலங்கை செய்தி

கண்டி மற்றும் நுவரெலியாவிற்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: உடனடியாக வெளியேறுமாறு 8 பிரதேசங்களுக்கு உத்தரவு

  • December 21, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் தொலுவ, மினிப்பே உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த உள்ளிட்ட நான்கு பிரிவுகளுக்கும் மூன்றாம் கட்ட சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் வசிப்போர் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேவேளை, கடந்த சில நாட்களில் மண்சரிவு அபாயம் குறித்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களைப் பரிசோதிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக தேசிய […]

இலங்கை செய்தி

நாளை முதல் யாழ்ப்பாணம் – அனுராதபுரம் இடையே மீண்டும் தொடருந்து சேவை ஆரம்பம்

  • December 21, 2025
  • 0 Comments

வடக்கு மார்க்கத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமைக்குத் திரும்பவுள்ளன. நாளை அதிகாலை 6.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் நோக்கிய முதலாவது சேவை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிய தொடருந்து நாளைய தினம் மாலை 2.30 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சிட்னி துப்பாக்கிச் சூடு: உளவுத்துறை கட்டமைப்பை மாற்றியமைக்க ஆஸ்திரேலிய பிரதமர் அதிரடி உத்தரவு

  • December 21, 2025
  • 0 Comments

சிட்னியின் போண்டி (Bondi) கடற்கரையில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தேசிய உளவு மற்றும் பொலிஸ் முகமைகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உத்தரவிட்டுள்ளார். ஐஎஸ் (ISIS) சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு தந்தை மற்றும் மகனால் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு சூழல் வேகமாக மாறிவருவதால், தீவிரவாதத்தை ஒடுக்க பாதுகாப்புப் படைகளுக்குப் கூடுதல் அதிகாரம் மற்றும் புதிய கட்டமைப்பு தேவையா என்பது குறித்து […]

error: Content is protected !!