உலகம் செய்தி

உஸ்மான் ஹாடி கொலையில் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் இந்தியாவிற்கு தப்பியோட்டம்

  • December 28, 2025
  • 0 Comments

வங்கதேச(Bangladesh) அரசியல் ஆர்வலர் ஒஸ்மான் ஹாடி(Osman Hadi) கொலையில் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் எல்லையைக் கடந்து மேகாலயாவிற்கு(Meghalaya) தப்பிச் சென்றுள்ளதை டாக்கா(Dhaka) பெருநகர காவல்துறை(DMP) உறுதிப்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து நாடு கடத்துவதை உறுதி செய்வதற்காக, இந்திய அதிகாரிகளுடன் தீவிரமாக ஒருங்கிணைந்து வருவதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பியோடியவர்கள் ஃபைசல் கரீம் மசூத்(Faisal Karim Masood) மற்றும் ஆலம்கீர் ஷேக்(Alamgir Sheikh) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உள்ளூர்வாசிகளின் உதவியுடன், மைமென்சிங்கில்(Mymensingh) உள்ள ஹலுகாட்(Halukhat) எல்லை […]

ஐரோப்பா செய்தி

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒருவர் மரணம் – இருவர் மாயம்

  • December 28, 2025
  • 0 Comments

ஸ்பெயினின்(Spain) தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒருவர் உயிரிழந்துள்ளார், இருவர் காணாமல் போயுள்ளனர். மலகாவில்(Malaga) வெள்ளத்தில் ஒரு வேன் அடித்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் வேனில் இருந்த இரண்டாவது பயணி இன்னும் காணவில்லை என்றும் ஸ்பெயினின் சிவில் காவல்படை தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, கிரனாடாவில்(Granada) மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் அடித்து செல்லப்பட்டதாகவும் அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்படை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட கொடிய வெள்ளத்தில் […]

#ShrutiHaasan #BlackBeauty #ShrutiHaasanPhotos #LatestPhotoshoot #Kollywood #ViralPhotos #ShrutiHaasanFans #BlackOutfit பொழுதுபோக்கு

கறுப்பு உடையில் காந்தக் கண்கள்!- சுருதிஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்; சொக்கிப்போன ரசிகர்கள்!

  • December 28, 2025
  • 0 Comments

சுருதிகாசனின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறது. கறுப்பு உடையில் ரசிகர்களின் உறக்கத்தை கொள்ளைகொள்ளும் கனவுக்கன்னி!    

உலகம் செய்தி

சுரினாமில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்

  • December 28, 2025
  • 0 Comments

தென் அமெரிக்க நாடான சுரினாமின்(Suriname) தலைநகர் பரமரிபோவில்(Paramaribo) நடந்த கத்தி குத்து தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அவரது சொந்த குழந்தைகளில் நான்கு பேர் அடங்குவர் என்று உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அவரது 11 வயது மகளை அவர்களின் வீட்டின் சமையலறையில் 44 முறை […]

இந்தியா செய்தி

இமாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளான பாராகிளைடர் – இளம் விமானி மரணம்

  • December 28, 2025
  • 0 Comments

இமாச்சலப் பிரதேசத்தின்(Himachal Pradesh) காங்க்ரா(Kangra) மாவட்டத்தில், பாராகிளைடர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நடுவானில் சமநிலையை இழந்து விபத்துக்குள்ளானதில் அனுபவம் வாய்ந்த விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். சர்வதேச அளவில் புகழ்பெற்ற பிர் பில்லிங்(Bir Billing) பாராகிளைடிங் தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பிர் பில்லிங் பாராகிளைடிங் சங்கத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பாராகிளைடரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நடுவானில் சமநிலையை இழந்து, ஏவுதளத்திற்கு கீழே உள்ள சாலை அருகே விபத்துக்குள்ளானது. உடன் […]

உலகம் செய்தி

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் உடல்நிலை கவலைக்கிடம்

  • December 28, 2025
  • 0 Comments

வங்கதேசத்தின்(Bangladesh) முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின்(Khaleda Zia) உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். வங்கதேச தேசியவாதக் கட்சியின்(BNP) 80 வயதான தலைவரான ஜியா, நவம்பர் 23 முதல் டாக்காவின்(Dhaka) எவர்கேர்(Evercare) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “செயற்கை சுவாசக் கருவி(ventilator) உதவியுடன் உள்ள கலிதா ஜியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூற முடியாது. அவர் மிகவும் முக்கியமான கட்டத்தை கடந்து வருகிறார்” என்று மருத்துவர் ஜாஹித்(Zahid ) மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் […]

உலகம்

80 ஆண்டுகளுக்குப் பிறகு செர்பியா தலைநகரில் அகற்றப்பட்ட 470 கிலோ எடையுள்ள அமெரிக்க வெடிகுண்டு

  • December 28, 2025
  • 0 Comments

செர்பியாவின்(Serbia) தலைநகரான பெல்கிரேடின்(Belgrade) மத்திய மாவட்டத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்திலிருந்து 470 கிலோகிராம் எடையுள்ள இரண்டாம் உலகப் போரின் வான்வழி குண்டு பாதுகாப்பாக அகற்றப்பட்டதாக அதகிரிகள் தெரிவித்துள்ளனர். 1944ம் ஆண்டு நாஜி(Nazi) ஆக்கிரமிப்பிலிருந்து பெல்கிரேடை விடுவித்தபோது, ​​ஜெர்மனியின்(Germany) நிலைகள் மீதான நேச நாட்டு விமானத் தாக்குதல்களின் போது அமெரிக்காவில்(America) தயாரிக்கப்பட்ட AN-M44 குண்டு பயன்படுத்தப்பட்டது. ஒரு குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு வர்த்தக வளாகம்(shopping mall) அருகே குண்டு காணப்பட்டதால் தீவிர கண்காணிப்புக்கு பிறகே குண்டு […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் மலையேற்றத்தின் போது காணாமல் போன பிரெஞ்சுக்காரர் இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்பு

  • December 28, 2025
  • 0 Comments

கர்நாடகாவிற்கு(Karnataka) சுற்றுலாப் பயணியாகச் சென்ற பிரெஞ்சுக்காரர்(France) ஒருவர் ஹம்பியில்(Hampi) உள்ள ஒரு மலையில் ஏற முயன்றபோது வழுக்கி விழுந்து காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற பாரம்பரியத் தலமான அஷ்டபுஜ ஸ்னானா(Ashtapuja Snana) மலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சுற்றுலாப் பயணி 52 வயதான புருனோ ரோஜர்(Bruno Roger) என அடையாளம் காணப்பட்டுளளார். வழுக்கி விழுந்த பிறகு புருனோ மலையின் பின்புறம் இரண்டு நாட்கள் வலியால் சிக்கித் தவித்துள்ளார். பின்னர் 52 […]

உலகம் செய்தி

சோமாலிலாந்தை அங்கீகரித்த இஸ்ரேலின் நடவடிக்கைக்கு சோமாலிய ஜனாதிபதி கண்டனம்

  • December 28, 2025
  • 0 Comments

இரண்டு நாட்களுக்கு முன்பு சோமாலிலாந்தை(Somaliland) முறையாக அங்கீகரித்த உலகின் முதல் நாடாக இஸ்ரேல்(Israel) மாறியது. இந்நிலையில், பிரிந்து சென்ற சோமாலிலாந்து பகுதியை இஸ்ரேல் அங்கீகரிப்பது உலகம் மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் என்று சோமாலிய(Somali) ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது(Hassan Sheikh Mohamud) அவசர நாடாளுமன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும், சோமாலிலாந்தை முதன்முதலில் அங்கீகரித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்(Benjamin Netanyahu) அறிவிப்பு, சோமாலி குடியரசின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களின் […]

செய்தி விளையாட்டு

டி20 தொடர் – இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

  • December 28, 2025
  • 0 Comments

இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரிவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி ஜனவரி மாதம் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதில் முக்கிய வீரர்களான பாபர் அசாம்(Babar Azam), ரிஸ்வான்(Rizwan), ஷாஹீன் அப்ரிடி(Shaheen Afridi) ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி – சல்மான் அலி ஆகா(Salman Ali Agha) அப்துல் சமாத்(Abdul […]

error: Content is protected !!