இலங்கையில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிப்பு? போலி தகவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் போலி செய்தியை வளிமண்டலவியல் திணைக்களம் மறுத்துள்ளது. இதனை நம்பி பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு எந்தவொரு அறிவுறுத்தலும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுகப்படவில்லை. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், அத்துடன் மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று […]