செய்தி

தென் கொரியாவில் அனைத்து விமானங்களிலும் அவசர பாதுகாப்பு சோதனை

  • December 31, 2024
  • 0 Comments

தென் கொரியாவில் அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவங்களிலும் அவசரக்கால பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி 179 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இது குறித்து புதிய இடைக்கால ஜனாதிபதி சோய் சாங்-மோக் திங்கட்கிழமை கூறியதாவது: நாட்டின் அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் செயல்படும் முறை குறித்து தீவிர பாதுகாப்பு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்கு இதுபோன்ற மிகக் கடுமையான சோதனைகள் தேவைப்படுகின்றன என அவர் […]

இலங்கை செய்தி

இலங்கை ரயில் பயணிகளுக்கு நாளை முதல் அமுலாகும் நடைமுறை

  • December 31, 2024
  • 0 Comments

ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயம் என இலங்கை ரயில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்திற்குள் நுழையும் போது, ​​ரயிலுக்குள் நுழையும் டிக்கெட்டை சரிபார்க்கும் போது, ​​டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் பயணிகளின் தேசிய அடையாள அட்டை […]

பொழுதுபோக்கு

மறைந்த நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை – அதிகாலையில் அதிர்ச்சி

  • December 31, 2024
  • 0 Comments

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். மகள் தற்கொலை செய்துக்கொண்டு இறந்த நிலையில், தற்போது தந்தையும் தற்கொலையால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம் தேதி சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் […]

செய்தி வாழ்வியல்

உடல் எடையை குறைக்க காலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய முதல் விடயம்

  • December 31, 2024
  • 0 Comments

காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. காலையில் முட்டை அல்லது புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது பசியை குறைத்து அதிகம் சாப்பிடுவதை தடுக்க உதவுகிறது. காலையில் எழுந்ததும் 20 முதல் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் குறைகிறது, மேலும் நாள் முழுக்க ஆற்றலுடன் இருக்க முடியும். காலையில் […]

ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் நடந்த சோகம் – மகளை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த ஆசிய தம்பதி

  • December 31, 2024
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல கடற்கரை ஒன்றில் பெர்த் தம்பதியொன்று தமது மகளைக் காப்பாற்ற முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிறிஸ்மஸ் விடுமுறையை வார இறுதியில் குடும்பத்துடன் மகிழ்வதற்காக அவர்கள் கான்ஸ்பிகுயஸ் கடற்கரைக்கு வந்திருந்தனர். தமது மகள் அலையில் மூழ்கியதைக் கண்ட பெற்றோர்கள் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக நீரில் குதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பெர்த்தில் வசிக்கும் திருமணமான தம்பதிகளான மருத்துவர் முகமது ஸ்வபன் மற்றும் அவரது மனைவி சப்ரினா அகமது ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தம்பதியினர் தங்கள் இரண்டு […]

இலங்கை

இலங்கையில் இன்று முதல் அடுத்து வரும் சில நாட்களுக்கு காலநிலையில் மாற்றம்

  • December 31, 2024
  • 0 Comments

இலங்கையில் இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு காலநிலையில் மாற்றம் ஏற்படும் என அறவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஜனவரியில் இருந்து சில கையடக்க தொலைபேசிகளில் WhatsApp இயங்காது

  • December 31, 2024
  • 0 Comments

பழைய ஆன்ட்ராய்டு ஓஎஸ் உள்ள சில செல்போன்களில் ஜனவரி ஒன்றாம் திகதியில் இருந்து வாட்ஸ்-ஆப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்கேட் ஓஎஸ் மற்றும் பழைய வெர்ஷன்கள் உள்ள செல்போன்களில் பாதுகாப்பு மற்றும் புதிய அப்டேட்களை சரியாக செயல்படுத்த முடியாது என்பதால் வாட்ஸ்-ஆப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் சாம்சங் செல்போன் மாடல்களான Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini மற்றும் மோடரோலா Moto G 1st Gen ஆகிய […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் பணியாற்றுவோருக்கு விரைவில் புதிய நிதியுதவி திட்டம்

  • December 31, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது அதற்கமைய வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் நிதியதவி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல நிறுவனங்கள் தமது தொழிலாளர்களை குறைத்து வருகிறது. இதன்காரணமாக வேலையற்றோருக்கான அமைப்பில் பதிவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையின்றி திண்டாடுவதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது இந்நிலையில் குறித்த நிறுவனங்களில் […]

செய்தி விளையாட்டு

மோசமான கேப்டனாகிய ரோஹித் – 5 இன்னிங்ஸில் வெறும் 31 ரன்கள்

  • December 31, 2024
  • 0 Comments

தொடர்ந்து திணறிவரும் ரோகித் சர்மா, பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-0 என முன்னிலை பெற்ற இந்திய அணியை தற்போது 2-1 என்ற மோசமான நிலைமைக்கு எடுத்துவந்ததற்கு காரணமானவர்களில் முக்கியமானவராக ஜொலிக்கிறார். எடுக்கும் அத்தனை முடிவுகளும் படுமோசமானதாகவும், சம்மந்தமே இல்லாமல் பிளேயிங் 11 அணியையும், எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த பவுலரை எடுத்துவர வேண்டும் என தெரியாமலும், 11வது வீரருக்கு கூட பவுண்டரி லைனில் பீல்டரை நிறுத்தும் ஒரு ஜோக்கர் கேப்டனாக பூஜ்ஜியமாகவே இருந்துவருகிறார் ரோகித் சர்மா. அவருடைய மோசமான […]

மத்திய கிழக்கு

ஆப்கானிஸ்தானில் அதிரடி சட்டம் – வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை

  • December 31, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டு தலிபான் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் பெண்கள் ஆரம்பக் கல்வி கற்கவும், பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அத்துடன், சமீபத்தில் பெண்கள் பொது இடங்களில் பாடுவதற்கும், கவிதைகள் வாசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது தலிபான் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள வீடுகளில் ஜன்னல் வைக்கத் […]