இலங்கை: கோர விபத்தில் சிக்கி இருவர் பலி 14 பேர் காயம்
ஹப்புத்தளை – பெரகல வீதியின் 48வது மைல்கம்பத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 16 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், இதன் போது காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் வேன் இயந்திரக் கோளாறினால் வாகனத்தை நிறுத்துவதற்காக வீதியிலிருந்த பெரிய பாறாங்கல் மீது மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் மற்றும் […]