ஆப்பிரிக்கா செய்தி

கொங்கோவில் தீவிரமடையும் எம்பொக்ஸ் – 610 பேர் மரணம்

  • August 30, 2024
  • 0 Comments

குரங்கு காய்ச்சல் எனப்படும் எம்பொக்ஸ் தொற்றால் கொங்கோ குடியரசில் இதுவரை 610 பேர் வரை உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அந்த நாட்டு சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதுவரை 17,800ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தநிலையில், அங்கு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வது அவசியம் என அந்த நாட்டு மக்களுக்கு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம் கொங்கொ குடியரசின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சுகாதார நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

கருத்து & பகுப்பாய்வு

பூமியை சுற்றியுள்ள மின்சார புலம் : 60 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்ட மர்மம்!

  • August 30, 2024
  • 0 Comments

60  ஆண்டுகளில் முதன்முறையாக, நாசா பூமியின் மறைக்கப்பட்ட மின்சார புலத்தை கண்டறிந்துள்ளது. இது “துருவ காற்றை” இயக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இது சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை சூப்பர்சோனிக் வேகத்தில் விண்வெளிக்கு அனுப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், இது சம்பந்தமான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இந்த மின்சார புலனானது முன்னதாக 60 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இவ்வாறான புலம் வெளிப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ராக்கெட்டின் அளவீடுகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் அம்பிபோலார்  […]

ஆஸ்திரேலியா செய்தி

வீட்டை விட்டு வெளியேறாத ஆஸ்திரேலியர்கள் பற்றி வெளியான தகவல்

  • August 30, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் உள்ள புறநகர் பகுதிகள் தொடர்பாக புதிய கண்டுபிடிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்காமல் நீண்ட காலமாக வீடுகளில் தங்கியுள்ளனர். இந்த தகவல் PropTrack வழங்கும் சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் அவர்களின் வீடுகளை விற்காமலோ அல்லது நகர்த்தாமலோ நீண்ட கால இருப்பு வைத்துள்ளது. அதனடிப்படையில், ஒரே வீட்டில் அதிக காலம் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர்கள் பிரதேசமாக நியூ சவுத் வேல்ஸில் உள்ள சர்ச் பாயின்ட் பெயரிடப்பட்டுள்ளதாகவும், சுமார் 22 வருடங்களாக வீட்டு […]

மத்திய கிழக்கு

82 டிகிரி வெப்பநிலையை பதிவுசெய்துள்ள ஈரான் : ஆபத்தில் உள்ள மக்கள்!

  • August 30, 2024
  • 0 Comments

ஈரானின் தெற்குக் கடற்கரையில் உள்ள ஒரு கிராமம் இந்த வாரம் ஆபத்தான அதிக வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளதாக காலநிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அங்குள்ள டேரெஸ்டன் விமான நிலையத்தில் உள்ள வானிலை நிலையம் 82.2 டிகிரி செல்சியஸ் வெப்பக் குறியீட்டைப் பதிவு செய்த நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், வெப்பக் குறியீடு மற்றும் 36.1 டிகிரி செல்சியஸ் பனி புள்ளி ஆகியவை கிரகத்தில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச அளவீடுகளில் ஒன்றாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போனுக்கு பின்புற கவர் போடுவதால் ஏற்படும் பிரச்சினை

  • August 30, 2024
  • 0 Comments

தொலைபேசியின் வெப்பநிலை அதிகரிப்பு சில பின் அட்டைகள், குறிப்பாக இரும்பு அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை, தொலைபேசியின் வெப்பநிலையை அதிகரிக்கலாம். இது போனின் பேட்டரியை பாதித்து அதன் ஆயுளைக் குறைக்கலாம். வடிவமைப்பு மற்றும் பூச்சு: தொலைபேசிகளின் அசல் வடிவமைப்பு மற்றும் லுக் போன்றவை போனின் விலையை அதிகரிக்கின்றன. அந்த நிலையில், அதிக விலை கொடுத்து வாங்கிய அழகான போனில் கவரை போட்டால், போனின் தோற்றத்தை கெடுத்துவிடும். எடை அதிகரிப்பு: சில போன் கவர்கள், மிகவும் தடிமனாகவும் கனமாகவும் இருக்கும், […]

ஆசியா

ஜப்பானில் மணிக்கு 160 மைல் வேகத்தில் வீசிய புயல் : மில்லியன் கணக்கான மக்கள் வெளியேற்றம்!

  • August 30, 2024
  • 0 Comments

ஜப்பானில் மணிக்கு 160 மைல் வேகத்தில் வீசிய சூறாவளியால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷான்ஷன் சூறாவளி ஜப்பானின் தெற்கு தீவான கியூஷுவில் கரையைக் கடந்தது சென்றது. இந்நிலையில் குறித்த பகுதியில் கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது. ஆறுகள் பெருக்கெடுத்து வெள்ளம்  ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கியூஷுவில் மியாசாகி நகரின் மையப்பகுதியில் புயல் வீசிய நிலையில், சுமார் 50 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றில் சிறந்த 11 வீரர்கள்… அஸ்வின் போட்ட பட்டியல்

  • August 30, 2024
  • 0 Comments

ரவிசந்திரன் அஸ்வின் தேர்வு செய்த ஐபிஎல் வரலாற்றில் பெஸ்ட் பிளேயிங் லெவன் குறித்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுகுறித்து இதில் காணலாம். கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு என யூ-ட்யூப் சேனல்களை வைத்துக்கொண்டு அதில் கிரிக்கெட் போட்டிகள் குறித்தும், கிரிக்கெட் நுணுக்கங்கள் குறித்தும் அடிக்கடி வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வீரர்களில் அஸ்வின், ஷமி உள்ளிட்டோரும் இதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். தமிழக வீரர்களில் பத்ரிநாத், அபினவ் முகுந்த் உள்ளிட்டோரும் தனித்தனியே தங்களின் யூ-ட்யூப் சேனல்களை […]

ஆப்பிரிக்கா

நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி : 700இற்கும் மேற்பட்ட விலங்குளை கொல்ல நடவடிக்கை!

  • August 30, 2024
  • 0 Comments

நமீபியா 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ளது. இதனால் 723 வன விலங்குகளை கொல்லப்போவதாக அறிவித்துள்ளது. 30 நீர்யானைகள், 60 எருமைகள், 50 இம்பாலாக்கள், 100 நீல காட்டெருமைகள், 300 வரிக்குதிரைகள், 83 யானைகள் என மொத்தமாக எழுநூறுக்கும் மேற்பட்ட விலங்குகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமீபிய அரசாங்கத்தின் இந்த வறட்சி நிவாரணத் திட்டம் உணவுப் பாதுகாப்பின்மையால் போராடும் மக்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு கூறியது. நாட்டில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில், தலையீடு செய்யாவிட்டால், […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு ஊடுருவிய உக்ரைன் – மக்களை பாதுகாக்க கான்கிரீட் அறைகளை அமைக்கும் ரஷ்யா

  • August 30, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியபடி உக்ரைன் படைகள் முன்னேறி வருகின்றது. இதனால் அங்குள்ள பேருந்து நிறுத்தங்கள் அருகே வெடிகுண்டு தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் கான்கிரீட் அறைகளை ரஷ்ய அரசா்கம் அமைத்து வருகிறது. நேரடி ஏவுகணை தாக்குதலில் இருந்து இவை மக்களை பாதுகாக்காத போதும், குண்டு வெடிப்பின்போது வெடித்து சிதறும் உலோகப் பொருட்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என கூறப்படுகிறது. குர்ஸ்க் பிராந்தியத்தில் ஆயிரத்து 200 சதுர கிலோமீட்டர் நிலத்தை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த […]

உலகம்

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் மூவர் பலி, பர் படுகாயம்!

  • August 30, 2024
  • 0 Comments

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் இருவர் நிகரகுவாவைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதேபோல் மற்றுமொருவர் ஈக்வடாரைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது. விபத்தில் காயம் அடைந்தவர்களின் நிலை குறித்து உடனடித் தகவல் இல்லை. மெக்சிகோவைக் கடந்து அமெரிக்க எல்லையை அடைய முயலும் புலம்பெயர்ந்தோருக்கு Oaxaca ஒரு முக்கிய பாதையாகும். இங்கு விபத்துக்கள் இடம்பெறுவது பொதுவானவையாகும்.  

error: Content is protected !!