வட அமெரிக்கா

அமெரிக்காவில் விவாகரத்து கிடைத்ததால் பார்ட்டி வைத்து கொண்டாடிய பாகிஸ்தானிய பெண்..!

  • July 27, 2024
  • 0 Comments

விவாகரத்து கிடைத்ததால் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் பெண் ஒருவர் பார்ட்டி வைத்து கொண்டாடினார். அவரது கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு அண்மையில் விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் முடிவுசெய்தார். தனக்கு விவாகரத்துகிடைத்ததை தனது நண்பர்கள்,தோழிகளுடன் அவர் ஹோட்டலில் மிகப்பெரிய அளவில் பார்ட்டி வைத்துக் கொண்டாடியுள்ளார். விவாகரத்து கிடைத்ததற்கு வாழ்த்துகள் என்ற பின்னணிப் பலகையுடன் அவர் கொண்டாட் டத்தில் ஈடுபட்டார். மேடையில் ஏறி நின்று […]

ஐரோப்பா

LTTE அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

  • July 27, 2024
  • 0 Comments

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இது ஜூலை 26 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனக் குறுப்பிடப்பட்டுள்ளதாக  இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகிறது.

ஐரோப்பா

விழாக்கோலம் பூண்ட பிரான்ஸின் பாரிஸ் நகர் : ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பம்!

  • July 27, 2024
  • 0 Comments

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது. வரலாற்றில் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை ஒலிம்பிக் மரபுகளுக்கு அப்பாற்பட்டு மைதானத்திற்கு வெளியே நடத்த பாரிஸ் ஒலிம்பிக்கின் ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா பாரிஸ் நகரில் உள்ள செய்ன் நதியை மையமாக கொண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. பிரான்சில் ஒலிம்பிக் திருவிழா நடைபெறுவது இது மூன்றாவது முறையாகும், […]

ஐரோப்பா

ரஷ்யாவில் எரிவாயு ஆலை வெடிப்பு: ஒருவர் மரணம், ஒன்பது பேர் காயம்

  • July 27, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் ஈஸ்ட் யுரேன்கோய் எரியாவு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்து்ளார்.வெடிப்பின் காரணமாக ஒன்பது பேர் காயமடைந்தனர். வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது. அந்த ஆலையை ரஷ்ய அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்று ஏற்று நடத்துகிறது. ஆலையின் ஊழியர்கள் சில சாதனங்களைப் பழுதுபார்க்கத் தயாராகிக்கொண்டிருந்தபோது வெடிப்பு ஏற்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறினர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்த ரஷ்ய ஊடகம், ஆலையைச் சுற்றியுள்ள இடங்களில் வசிக்கும் மக்களுக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆபத்து இல்லை என்று கூறியது. […]

உலகம்

எதிர்பாராத அளவு வருமானத்தை இழந்து வரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள்

  • July 27, 2024
  • 0 Comments

உலகின் பத்து பணக்காரர்கள் ஒரு நாளைக்கு சுமார் 100 பில்லியன் டொலர் வருமானத்தை இழக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, உலக பணக்காரர்களின் வருமானத்தில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தற்போதைய வருமானம் 353.87 பில்லியன் டொலர் கொண்ட உலகின் பணக்காரர் ஆவார். சமீபத்திய தகவல்களின்படி, ஜூலை 25 அன்று மட்டும் அவரது நிகர மதிப்பு 23.16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் […]

பொழுதுபோக்கு

விட்டதை பிடிக்க ஷங்கர், கமல் திட்டம்.. இந்தியன் 3 விரைவில் ஆரம்பம்

  • July 27, 2024
  • 0 Comments

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில், இந்தியன் 3 படத்திற்கான படப்பிடிப்பை படக்குழு தொடங்கி உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் திரைப் பயணத்திலும் மிக முக்கியமான படம் இந்தியன். 1996ம் ஆண்டு வெளியான இந்த படத்தில்,கமல்ஹாசன், சுகன்யா,மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தின் […]

கருத்து & பகுப்பாய்வு

உலக வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு உயர்வு – பில்லியன் கணக்கான மக்கள் பாதிப்பு

  • July 27, 2024
  • 0 Comments

உலக வெப்பம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் “வெப்ப தொற்றுநோயை” அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், வெளியிட்ட அறிக்கைக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு தீர்வு காண நாடுகளை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தும் வரை இந்த வெப்பமான சூழ்நிலையிலிருந்து விடுபட முடியாது என்றும் அவர் கூறுகிறார். கடந்த ஜூலை 2023 […]

இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான தகவல்

  • July 27, 2024
  • 0 Comments

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கிளப் வசந்தவின் மனைவி மெனிக் விஜேவர்தன தொடர்ந்தும் களுபோவில வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் ஓரளவு குணமடைந்து விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுருகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிலையமொன்றை திறப்பதற்கு சென்றிருந்த போது கிளப் வசந்தவை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு அவரும் மற்றொரு நபரும் உயிரிழந்தனர். மேலும், கிளப் வசந்தாவின் மனைவியும், […]

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் கடுமையான வரிகள் – மின்கட்டண உயர்வால் கடும் நெருக்கடி

  • July 27, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் கடுமையான வரிகள் மற்றும் மின்கட்டண உயர்வால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் தலைமைச் செயலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் சாலை மறியல் செய்தனர். தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை போலீசார் தடுத்த நிலையில், வரிகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என கட்சித் தலைவர்கள் அறிவித்தனர்.

செய்தி வாழ்வியல்

தினமும் படிக்கட்டுகள் ஏறினால் ஏற்படும் நன்மைகள்!

  • July 27, 2024
  • 0 Comments

நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கும். அந்த வகையில் துரிததியிலான வாழ்க்கையில், பயிற்சி செய்ய நேரமில்லை என்று வருந்த வேண்டாம். தினமும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படிக்கட்டுகளை ஏறி இறங்குவதை வழக்கமாகக் கொண்டாலே போதும். பல நோய்களுக்கு குட் நைட் சொல்லி விடலாம். இதயம் ஆரோக்கியம்: தினமும் 7 நிமிடம் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், கொலஸ்ட்ரால் எரிக்கப்பட்டு இதய நோய்கள், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் பெரிதளவு குறையும் என்று ஆய்வுகளில் […]

error: Content is protected !!