வட அமெரிக்கா

மருத்துவமனையை விட்டு வெளியேறிய ட்ரம்ப் – அடுத்த மாநாட்டிற்கு பயணம்

  • July 15, 2024
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நேற்று பிரசாரத்தின்போது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. ட்ரம்பைத் தாக்கியவர் 20 வயது தோமஸ் மேத்தியூ குரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்தில் திரு டிரம்ப்பின் வலது காதின் மேல் புறத்தைத் தோட்டா துளைத்துச் சென்றது. பிரசாரத்துக்கு வந்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

பொழுதுபோக்கு

3 நாட்களில் இவ்வளவு தான் வசூலா? தலையில் துண்டை போட்ட லைக்கா?

  • July 15, 2024
  • 0 Comments

கமல் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 கடந்த வாரம் வெளிவந்தது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்துள்ள இப்படம் ஏழு வருடங்களாக இழுத்தடித்து வந்த நிலையில் ஒரு வழியாக ரிலீசானது. ஆனால் தற்போது படத்திற்கு கிடைத்து வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் தயாரிப்பு தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்த லைக்கா இப்போது போட்ட பணத்தை எடுத்து விட முடியுமா என டென்ஷனில் இருக்கிறார்களாம். இது ஒரு பக்கம் இருக்க சங்கர் முன்பு […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணத் திருத்தம் – இன்று வெளியாகும் அறிவிப்பு!

  • July 15, 2024
  • 0 Comments

இலங்கையில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின்சார கட்டணத் திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிக்கவுள்ளது. மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்திருந்தது. இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை மீளாய்வு செய்து உரிய தரவுகளை ஆராய்ந்து பொதுமக்களின் கருத்துக்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பெற்றுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளது. அத்துடன் […]

வாழ்வியல்

வைட்டமின் பி12 அதிகரிப்பால் ஏற்படும் பக்க விளைவுகள்!

  • July 15, 2024
  • 0 Comments

நம்முடைய உடல் சீராக இயங்குவதற்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியம். அதோடு நாம் உண்ணும் உணவுகளை நம்முடைய உடல் கிரகித்துக்கொள்ளவும், உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்வதற்கும் வைட்டமின் பி12 உதவுகிறது. கோபாலமின் என்று அழைக்கப்படும் வைட்டமின் பி12 மனித உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வைட்டமின் பி12 எட்டு பி வைட்டமின்களில் ஒன்றாகும். ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதில் வைட்டமின் பி12 குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இது மூளை மற்றும் நரம்புகளின் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் வன்முறைகளுக்கு இடமில்லை – ஜோ பைடன் அறிவிப்பு

  • July 15, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பென்சில்வேனியாவில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து எப்.பி.ஐ. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருவதாகவும், அதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் நோக்கம் குறித்து எந்தவித […]

இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர் அர்ச்சுனா – பொலிஸார் குவிப்பு

  • July 15, 2024
  • 0 Comments

வடக்கு மருத்துவத் துறையில் இடம்பெற்றுவரும் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா கடந்த வாரம் விடுப்பில் (leave) கொழும்புக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர். இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை விரட்டியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸாரின் இந்த செயற்பாடு […]

ஐரோப்பா

ஸ்பெயினின் நான்காவது வெற்றியை கொண்டாடிய மில்லியன் கணக்கான மக்கள்

  • July 15, 2024
  • 0 Comments

யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது. 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது. யூரோ கிண்ணத்தை நான்காவது முறையாக ஸ்பெயின் வென்றுள்ளது. ஸ்பெயின் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். மட்ரிட் நகரின் (Madrid) Colon சதுக்கத்தில் ரசிகர்கள் மாபெரும் கொண்டாட்டத்தில் இறங்கினர்.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் நிலத்தடி ரயிலுக்குள் சிக்கிக் கொண்ட நூற்றுக் கணக்கான பயணிகள்

  • July 15, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சிட்னி பயணிகள் குழு ஒன்று ரயில் சேவையில் இடையூறு காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் நிலத்தடி ரயிலுக்குள் சிக்கிக்கொண்டது. வடமேற்கு மெட்ரோ பாதையில் ஓடும் ரயில் ஒன்று நேற்று முன்தினம் காலை 8.15 மணியளவில் செர்ரிபுரூக் மற்றும் எப்பிங் இடையேயான பகுதியில் திடீரென நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது, ​​ரயிலுக்குள் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அச்சமடைந்து, குளிரூட்டிகள் செயல்படாததால், பயணிகளின் சத்தம் சுரங்கப்பாதை முழுவதும் எதிரொலித்தது. ரயில் தாமதம் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பூட்டிய காரில் 7 மணி நேரம் விட்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • July 15, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள ஒமாஹாவில் காரில் தனியாக காரில் விட்டு செய்யப்பட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அழகு நிலையம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் கார் நிறு்த்தப்பட்டிருந்தது. பூட்டிய காரில் 7 மணி நேரத்திற்கும் மேலாக சிறுவன் தனிமையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. 40 வயதுடைய சந்தேகநபர் இந்தக் குழந்தையைப் பராமரிக்க நியமிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. புதன்கிழமை மாலை 5 மணியளவில் சிறுவன் காரில் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும், வைத்தியசாலையில் […]

விளையாட்டு

தோனிக்கு இடமில்லை – சிறந்த 11 வீரர்களை தேர்வு செய்த யுவராஜ் சிங்!

  • July 15, 2024
  • 0 Comments

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ஆல்டைம் பிளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங், சமீபத்தில் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் இந்திய சாம்பியன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி பட்டத்திற்கு அழைத்துச்சென்றார். சனிக்கிழமை பர்மிங்காமில் நடந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை எதிர்கொண்ட இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. இதற்கிடையில், பேட்டியொன்றில் பேசியிருக்கும் யுவராஜ் சிங் தன்னுடைய […]

error: Content is protected !!