இலங்கை செய்தி

மத்திய மாகாணத்தில் இரு நாட்கள் பரீட்சைகள் நிறுத்தம் – அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

  • July 16, 2024
  • 0 Comments

ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024 திட்டம் இதுவரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (16) நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்திற்காக, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் இன்றும் நாளையும் (17) பாடசாலை பருவ பரீட்சைகள் நடைபெறாத வகையில் பரீட்சை அட்டவணையை அரசாங்கம் தயாரித்துள்ளதாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய மாகாண பாடசாலைகளில் கடந்த 10 நாட்களாக ஆரம்பமான பருவப் பரீட்சை […]

இலங்கை

இலங்கை:மனைவியிடம் தவறாக நடந்து கொண்ட நபர் அடித்து கொலை செய்த கணவன்!

  • July 16, 2024
  • 0 Comments

பெண் ஒருவரிடம் முறையற்ற வகையில் நடந்துக் கொண்ட நபர் ஒருவரை, அந்த பெண் தனது கணவர் மற்றும் மற்றுமொரு நபருடன் சேர்ந்து தாக்கி கொலை செய்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொத்துபிட்டிய பின்னகொடெல்ல பிரதேசத்தில் கடந்த 11ஆம் திகதி நபர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.அந்தப் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்த நபரின் தலை இரண்டாக பிளவுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்திற்கு […]

இலங்கை செய்தி

பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்கள் 20 வீதம் குறைக்க முடியும் – அமைச்சர் காஞ்சனா

  • July 16, 2024
  • 0 Comments

மின்சார விலை திருத்தத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை சுமார் 20% குறைக்க முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் நாளில் நள்ளிரவில் அதிகரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். உறுதியான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் இன்று (16) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் […]

உலகம்

காசாவில் தனது கோர முகத்தை காட்டும் இஸ்ரேல் : பசியால் உணவு தேடி அலையும் சிறுவர்கள்!

  • July 16, 2024
  • 0 Comments

காசாவில் அதிகரித்து வரும் பஞ்சத்தை ஏற்படுத்திய இஸ்ரேலின் முற்றுகைக்கு மத்தியில் உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காசாவில் குழந்தைகள் இடிபாடுகளிலும் குப்பைகளிலும் தேடுவதை சமீபத்திய படங்கள் காட்டுகின்றன. 30,000 க்கும் அதிகமானோர் இறந்த தேசத்தில் மனிதாபிமான உதவி நெருக்குதல் பஞ்சத்தை உருவாக்குவதால் பலர் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். UNICEF, காசா “பஞ்சத்தின் விளிம்பில்” இருப்பதாக கூறியுள்ளது. மனிதாபிமான தொழிலாளர்களை ரஃபா கடவைக்கு அணுக இஸ்ரேல் அனுமதிக்கவில்லை என்றும் ஐநா அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையிலேயே உணவுக்காக ஏங்கும் […]

இலங்கை

இலங்கை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள்: அமைச்சரவை தீர்மானம்

இலங்கையில் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான குறைந்தபட்ச தகைமைக்கான அளவுகோல் தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. பல்கலைக்கழக சட்டத்தின் 25(A) பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்ட 26 பட்டப்படிப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையை அறிவு மையமாக மாற்றும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், […]

ஆசியா

தாய்லாந்தில் சொகுசு விடுதியில் மர்மமான முறையில் 06 பேர் உயிரிழப்பு!

  • July 16, 2024
  • 0 Comments

தாய்லாந்தில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதி ஒன்றில் 06 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பாங்காக்கின் ராட்சப்ராசோங் மாவட்டத்தில் உள்ள கிராண்ட் ஹயாட் எராவான் ஹோட்டலில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்திற்குச் சென்ற பின்னர், அதிகாரிகள் மேலும் ஐவரைக் கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை என்பதும் […]

பொழுதுபோக்கு

அதிரடியாக வெளியானது ‘ராயன்’ ட்ரைலர் – தனுஷ் மாஸ்

  • July 16, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷின் 50 ஆவது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், வருகிற 26 ஆம் திகதி படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது ராயன் படத்தின் ட்ரைலரை வௌியாகியுள்ளமை குறிப்பிட்டதக்கது.  

ஆசியா

மத்திய காசாவில் குடிநீர் இன்றி தவிக்கும் 7இலட்சம் மக்கள்: விடுக்கப்பட்டுள்ள அவரச எச்சரிக்கை

700,000 மக்களுக்கு இனி குடிநீர் வழங்க முடியாது என்று டெய்ர் அல்-பலாஹ் நகராட்சி தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இன்னும் படையெடுக்காத மத்திய காசா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலாவில், நூறாயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர், இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 700,000 மக்களுக்கு இனி குடிநீர் வழங்க முடியாது என்று நகராட்சி அவசர அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் சற்று முன்னர் பதிவான நிலநடுக்கம்!

  • July 16, 2024
  • 0 Comments

அனுராதபுரத்திற்கும் கந்தளேவிற்கும் இடையில் இன்று (16) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆகப் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிடுகிறது.

மத்திய கிழக்கு

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காசாவில் 33 பேர் பலி!

  • July 16, 2024
  • 0 Comments

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. திங்கட்கிழமை நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மத்திய காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர். நுசெய்ரத் மற்றும் ஜவைடா ஆகிய இரண்டு இடங்களில் நடத்திய தாக்குதலில் 10 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். கடந்த வாரம் இஸ்ரேல் மீது அக்டோபர் […]

error: Content is protected !!