ஆஸ்திரேலியா

கோடீஸ்வரர்களாக மாறவுள்ள 40,000 ஆஸ்திரேலியர்கள்

  • July 17, 2024
  • 0 Comments

அடுத்த 5 ஆண்டுகளில் 40,000 ஆஸ்திரேலியர்கள் கோடீஸ்வரர்களாக மாறுவார்கள் என புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களின் பெருகி வரும் செல்வம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்களை கோடீஸ்வரர்களாக்கும் என்று புதிய உலகளாவிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் செல்வ வளம் அதிகரித்து வருகின்ற போதிலும், அது இந்நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானதல்ல எனவும் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. 56 நாடுகளில் இருந்து 2023 வரையிலான தரவுகளின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் வளர்ச்சியை அளவிடும் சுவிஸ் வங்கி […]

பொழுதுபோக்கு

ராதிகா மெர்ச்சன்டின் திருமணமண ஆடை எப்படி உருவானது தெரியுமா? வைரல் வீடியோ

  • July 17, 2024
  • 0 Comments

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் மணப்பெண் அணிந்திருந்த ஆடையின் சிறப்புகள் பற்றித்தான் தற்போது எங்கும் பேச்சக உள்ளது. இவர்களுடைய திருமண நிகழ்வுகள் பல நாட்களாக மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தன. இந்த திருமண நிகழ்வுக்கு ரூ 5000 கோடி வரை செலவிடப்பட்டதாக தெரிகிறது. அதாவது முகேஷ் அம்பானியின் சொத்தில் 0.5 சதவீதம் செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. ராதிகா, அபு ஜானி சந்தீப் கோஸ்லா டிசைன் செய்த ஆடையை தனது திருமண விழாவில் அணிந்திருந்தார். அவருடைய பனேட்டர் எனப்படும் […]

இலங்கை

ஓமானுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல் மூழ்கியதில் இலங்கையர் மாயம்!

  • July 17, 2024
  • 0 Comments

ஓமானுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பலொன்று மூழ்கிக் காணாமல் போயுள்ளது. அதனுடன் 3 இலங்கையர்களும் காணாமல் போயுள்ளதாக ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. குறித்த கப்பலின் பணிக்குழாமில் 13 இந்தியர்களும், 3 இலங்கையர்களும் அடங்குவதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை கடலில் மூழ்கிய குறித்த எண்ணெய்க் கப்பல் தற்போது முழுவதுமாக காணாமல் போயுள்ளதாகவும், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொமொரோஸ் கொடியுடன் பயணித்த இந்த எண்ணெய்க் கப்பல் ஓமானின் ராஸ் […]

செய்தி

தாய்லாந்தில் ஹோட்டல் அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட 6 பேர் – அதிர்ச்சியில் பொலிஸார்

  • July 17, 2024
  • 0 Comments

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஹோட்டலில் 6 பேர் உயிரிழந்து கிடந்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து அந்நாட்டுக் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மூவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது. வியட்நாமியர்களான அவர்களில் சிலர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாகும். அனைவரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தனித்தனியாக ஹோட்டலை அடைந்தனர். அவர்கள் வெவ்வேறு அறைகளைப் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஒரே அறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். அங்குச் சண்டை […]

வாழ்வியல்

குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதை காட்டும் முக்கிய 5 அறிகுறிகள்

  • July 17, 2024
  • 0 Comments

இன்றைய நவீன காலகட்டத்தில் மக்கள் பிஸியான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக பல நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்த நோய்களால் உடலின் பல உறுப்புகள் சேதமடைகின்றன. உணவுமுறை ஆரோக்கியமாக இல்லாத காரணத்தால் மென்னெப்போதும் இல்லாத அளவிற்கு குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது இப்பொழுது மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. குடல்கள் உணவை ஜீரணிப்பதிலும் சத்துகளை உறிஞ்சுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுமட்டுமின்றி இவற்றின் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் தென்படுகின்றது. […]

இலங்கை

இலங்கையில் அதி சொகுசு பேருந்துகள் விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

  • July 17, 2024
  • 0 Comments

குருணாகல் மெல்சிறிபுர பகுதியில் அதிசொாகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து சாரதி உயிரிழந்துள்ளதோடு, 8 பேர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்றுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வேலை தேடுபவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

  • July 17, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அல்லது ஒன்பது மாதங்களுக்கு ஒருமுறை வேலை மாறுகிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இது ஓய்வுக்கு முன் சராசரியாக 16 வெவ்வேறு வேலைகளை வைத்திருப்பதற்கு சமம் என்று தெரியவந்துள்ளது. ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கு முன், உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் திறன்களின் அடிப்படையில் என்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவில் கால்நடை மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் விவசாயத் துறையில் […]

அறிந்திருக்க வேண்டியவை

AI DeepFake Video-க்களை நீக்க Youtube அனுமதி

  • July 17, 2024
  • 0 Comments

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் AI அபரிவிதமான வளர்ச்சியை கொண்டுள்ளது. தனிப்பட்ட நபரின் அமைப்பு, திறன் அனைத்தையும் நல்வழியிலும், தவறான வழியிலும் கட்டமைக்க பயன்படுத்தப்படுகிறது. அண்மையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ, ஆலியாபட்டின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இது போன்ற தவறான தகவல்களின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கும், பயனர் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், YouTube அதன் கண்டென்ட் மதிப்பாய்வு அம்சங்களை விரிவுபடுத்தியுள்ளது. பயனர் கோரிக்கைக்கு அனுமதி! தவறான நோக்கத்தில், டீப்ஃபேக்குகளை உருவாக்க செயற்கை […]

உலகம் செய்தி

தனது Followers களை அடிமையாக வைத்திருந்த இன்ஸ்டா பிரபலத்திற்கு நேர்ந்த கதி

  • July 17, 2024
  • 0 Comments

இன்ஸ்டா பிரபலம் கேட் டோரஸிற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வலைதள பக்கத்தில் தன்னை பின் தொடர்ந்த இருவரை வீட்டில் அடிமையாக வைத்திருந்த வழக்கில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ‘டைட்டானிக்’ பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்பட்டவர் பிரேசிலை சேர்ந்த முன்னாள் மாடலும், இன்ஸ்டா பிரபலமுமான கேட் டோரஸ். இவர் போதைப் பொருள்களை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் உடற்பயிற்சி, ஆரோக்கியம், […]

இலங்கை செய்தி

கிளப் வசந்த உட்பட இருவரை கொன்றவர்கள் இலங்கையை விட்டு தப்பியோட்டம்?

  • July 17, 2024
  • 0 Comments

அதுருகிரிய பச்சை குத்தும் மையத்தில் கிளப் வசந்த உட்பட இருவரை சுட்டுக் கொன்ற பாதாள உலக குத்தகைக் கொலையாளிகள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என விசாரணை குழுக்கள் சந்தேகிக்கின்றன. அவர்கள் தென் கரையோரத்தில் இழுவை படகில் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பல மூத்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாடகைக் கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்த பல இடங்களில் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சோதனையிட்ட போதும் அவர்கள் தொடர்பில் […]

error: Content is protected !!