இலங்கை

இலங்கையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து 4 வயது பெண் குழந்தை பலி!

  • July 17, 2024
  • 0 Comments

ருவன்வெல்ல, கிரிபோருவ பிரதேசத்தில் உள்ள கிணற்றில் இருந்து 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தெவ்மி அமயா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொழுதுபோக்கு

ரத்தம் தெறிக்கும் கத்தியுடன் விஜய் சேதுபதி… “விடுதலை 2” ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

  • July 17, 2024
  • 0 Comments

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் விடுதலை பாகம் 1. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருந்த கதாபாத்திரங்கள் படத்தின் தன்மைக்கு முற்றிலும் […]

இலங்கை

இலங்கை: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு

ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க தனது பிரேரணையில் பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆசியா

வடகொரியாவின் மோசமான செற்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தென் கொரிய மக்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

  • July 17, 2024
  • 0 Comments

வடகொரியாவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் தென்கொரியாவிற்குள் அடித்து செல்லப்படலாம் என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரியா சமீபத்தில் பல்லாயிரக்கணக்கான கூடுதலான கொடிய வெடிபொருட்களை எல்லை பகுதியில் புதைத்து வைத்துள்ளது. வட கொரியா தனது முன்னணி பாதுகாப்பு நிலையை உயர்த்துவதையும், அதன் வீரர்கள் மற்றும் குடிமக்கள் தென் கொரியாவுக்குத் திரும்புவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இது எல்லையில் புதைக்கப்பட்ட வெடி […]

ஐரோப்பா

தென்சீனக் கடலில் சீனா- ரஷ்யா நேரடி கடற்படைப் பயிற்சி!

சீனாவும் ரஷ்யாவும் இந்த வாரம் தென் சீனக் கடலில் நேரடி துப்பாக்கிச் சூடு கடற்படைப் பயிற்சிகளை மேற்கொண்டதாக ரஷ்ய மற்றும் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன, அமெரிக்கத் தடைகளைத் தொடர்ந்து இரு நாடுகளும் சமீபத்திய ஆண்டுகளில் இராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தியுள்ளன. மூன்று நாள் பயிற்சிக்காக இரு நாடுகளும் குறைந்தது மூன்று கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று சீனாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் செய்தித்தாள் செவ்வாய்கிழமை பிற்பகுதியில் மக்கள் விடுதலை இராணுவ கடற்படையை […]

உலகம்

குறுகிய காலத்தில் 21 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை : சிக்கிய 300 நபர்கள்!

  • July 17, 2024
  • 0 Comments

மேற்கு ஆபிரிக்க ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த ஏறக்குறைய 300 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து $3 மில்லியன்  பறிமுதல் செய்யப்பட்டதாவும்,  720 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும்,  இன்டர்போல் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ஜாக்கல் III எனப் பெயரிடப்பட்ட இந்த விசேட நடவடிக்கை , ஏப்ரல் 10 முதல் ஜூலை 3 வரை 21 நாடுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் நிதி மோசடி மற்றும் அதன் பின்னணியில் உள்ள குற்றக் கும்பல்களை குறிவைத்தே இந்த அதிரடி நடவடிக்கை […]

இலங்கை

இலங்கை: கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட தகவல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இ-பாஸ்போர்ட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை அறிவித்துள்ளது, இது ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய முறை இன்று (ஜூலை 17) முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ள குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது. இ-பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் https://www.immigration.gov.lk என்ற இணைப்பின் மூலம் முன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குடிவரவுத் திணைக்களம் பதிவு செய்ததன் பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் பெறப்படும் என்றும், […]

ஐரோப்பா

இரத்தத்தை உரைய வைக்கும் போர் ஆணையை வெளியிட்ட ரஷ்யா!

  • July 17, 2024
  • 0 Comments

விளாடிமிர் புட்டினின் உயர் அதிகாரிகளில் ஒருவர் இரத்தத்தை உரையவைக்கும் போர் ஆணையை வெளியிட்டுள்ளார். அதாவது உக்ரேனிய அரக்கர்களை படுகொலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ், உக்ரேனிய அரக்கர்கள் எங்கள் கைதிக்கு என்ன செய்தார்கள் என்று என் தோழர்கள் விவாதிக்கிறார்கள், ஜெனிவா உடன்படிக்கைகள், உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. எனது சொந்தப் பல்கலைக்கழகத்திலும் எனக்கு நன்றாகக் கற்பிக்கப்பட்டது. அதைப் பற்றி நீங்கள் […]

பொழுதுபோக்கு

முன்னாள் காதலர் சல்மான் கானோடு ஐஸ்வர்யா ராய் நெருக்கம்? அவரே கொடுத்த பதில்

  • July 17, 2024
  • 0 Comments

உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் மக்கள் மனதில் சட்டென்று தோன்றுவார். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி இருக்கும் அவர்; இப்போது பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில குடியரசுக் கட்சியின் மாநாட்டிற்கு அருகில் கத்தியுடன் இருந்த நபரை சுட்டு கொன்ற அதிகாரிகள்

  • July 17, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் கொலை முயற்சியிலிருந்து அண்மையில் தப்பியிருக்கும் வேளையில் மற்றொரு சம்பவத்தில் கத்தியுடன் இருந்த நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். மில்வாக்கியில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 15ஆம் திகதியிலிருந்து நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில்தான் டொனல்ட் டிரம்ப் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். இதனால் நாடு முழுவதிலுமிருந்து 50,000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.இதையொட்டி மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஃபிசர்வ் ஃபாரம் என்ற இடத்தில் குடியரசுக் கட்சியின் […]

error: Content is protected !!