தமிழ்நாடு

கோவை: வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடாததால் பறிப்போன இளைஞரின் உயிர்!(video)

  • September 30, 2023
  • 0 Comments

கோவை கொடிசியா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் வெள்ளை நிற கோடு போடப்படாத நிலையில், நள்ளிரவில் அவ்வழியாக வந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாந்த்(26). இவர் சேரன் மாநகரில் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு சுமார் 12 மணியளவில் டிப்பார்ட்மெண் ஸ்டோரை மூடிவிட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது கொடிசியா அருகே கீதாஞ்சலி பள்ளி(தனியார் பள்ளி) அருகே சென்று […]

இலங்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடி : அடுத்த மாதம் முதல் மின்கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • September 30, 2023
  • 0 Comments

வறண்ட காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவினங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க  இலங்கை மின்சார சபை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வரும் ஜனவரி மாதம் முதல்  மின் கட்டண உயர்வை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஒக்டோபர் மாதமே மின்கட்டண உயர்வை கோரியிருந்ததாக   கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்தார். இவ்வருடம் போதிய அளவு […]

உலகம்

நிவ்யோர்கில் அவசர நிலை பிரகடனம்!

  • September 30, 2023
  • 0 Comments

நியூயோர்க் நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீற்ற காலநிலை காரணமாகவே மேற்படி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, அதே நேரத்தில் லாகார்டியா விமான நிலையத்தில் குறைந்தபட்சம் ஒரு முனையமாவது நேற்று (29.09) மூடப்பட்டது. நகரின் சில பகுதிகளில் 8in (20cm) வரை மழை பெய்துள்ளதுடன், இந்த வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த […]

இலங்கை

அபிவிருத்தி குழு தலைவர் மஸ்தானை திட்டி தீர்க்கும் மன்னார் மக்கள்

  • September 30, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் மீது தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை மன்னார் மக்கள் முன் வைத்து வருகின்றனர். குறிப்பாக மன்னார் தீவக பகுதியில் நீண்ட நாட்களாக பல அபிவிருத்தி திட்டங்கள் கிடப்பில் இருப்பதாகவும் அது தொடர்பில் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை எனவும் அதே நேரம் வடக்கில் உள்ள பல மாவட்டங்களில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன வள திணைக்களத்தின் […]

இலங்கை

நிலவும் சீரற்ற வானிலை : இலங்கையின் பலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

  • September 30, 2023
  • 0 Comments

தொடர் மழை காரணமாக நில்வலா ஆறு, ஜின் கங்கை மற்றும் குடா கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ‘அம்பர்  வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசன திணைக்களம் இன்றும் (30.09)  நீட்டித்துள்ளது. இதன்படி குறித்த வெள்ள அபாய எச்சரிக்கை வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குறித்த அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல்  களு […]

வட அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் – ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி

  • September 30, 2023
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இடைக்கால மசோதாவை ஆதரிக்கின்றனர். ஆனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அதை எதிர்க்கின்றனர். மக்களவை நாயகர் evin McCarthy மசோதாமீது வாக்கெடுப்பு நடத்தத் தயாராகிறார். இருப்பினும் அவருடைய சொந்தக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் அவருக்குச் சிரமம் நீடிக்கிறது. மெக்கார்தியைத் தலைமைப் பொறுப்பிலிருந்து […]

வாழ்வியல்

மெதுவாகக் கொல்லும் விஷமாகியுள்ள உப்பு

  • September 30, 2023
  • 0 Comments

உப்பில்லா பண்டத்தை நம்மால் ஒருபோதும் உண்ண முடியாது. அதாவது, உணவில் உப்பின் சுவை இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இதை அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மிதமான உப்பு நம் உடலுக்கு அவசியம். ஏனென்றால், நம் உடலில் உள்ள திரவத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளவும், நரம்பின் செயல்பாடு மற்றும் தசைச் சுருக்கங்களைப் பராமரிக்கவும் இது உதவுகிறது. உப்பை ஒருவர் அதிகப்படியாக உட்கொள்ளும்போது அது நம் ஆரோக்கியத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, அதிகப்படியான உப்பு உயர் […]

இலங்கை

இலங்கையில் நாளை முதல் அமுலுக்கு வரும் தடை

  • September 30, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்யும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்தார். அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான திடீர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பா

நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டம் இரத்து – நெருக்கடியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

  • September 30, 2023
  • 0 Comments

நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டமானது அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்ட பிறகு, பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயனடைய முடியாது. நெதர்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை (NLS) வழங்கிய அறிக்கையின் மூலம் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடை முதலீட்டாளர்களுக்கான குடியிருப்பு அனுமதி 2024 ஜனவரி 1 முதல் இனி கிடைக்காது என நெதர்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டம் பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டச்சு பொருளாதாரத்திற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரிக்கும் வங்கி வீதம்!

  • September 30, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் 4.9 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிசக்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால் இந்த நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் மிட்செல் புல்லக் தனது முதல் மாதாந்திர வட்டி விகித அறிவிப்பை வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளார். இருப்பினும், வட்டி […]