நான் நலமுடன் இருக்கின்றேன்!! மஹிந்த ராஜபக்ச
தனது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். களனி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், தான் நலமுடன் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்தார். “நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேனா அல்லது நல்ல நிலையில் இருக்கிறேனா என்பதை நீங்கள் பார்க்கலாம். சமூக ஊடகங்களில் இடுகையிடுவதை ஒருவர் பெரிதாக எடுத்துக் […]