நான் பதவியில் இருக்கும் வரை சீனா தைவானை தாக்காது – ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு
தான் பதவியில் இருக்கும் காலம் வரை தைவானுக்கு எதிராகச் சீனா இராணுவ நடவடிக்கை எடுக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கை நடந்தால் அமெரிக்கா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ட்ரம்ப் வியாழக்கிழமை தென் கொரியாவில் சீன ஜனாதிபதியைச் சந்தித்தார்.
பேச்சுவார்த்தையின் போது தைவான் (Taiwan) பற்றி விவாதிக்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பின்னர் தெரிவித்தார்.
சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சீனா இராணுவ நடவடிக்கை எடுத்தால் தைவானைப் பாதுகாக்க அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிடுவாரா என ட்ரம்பிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ட்ரம்ப், அப்படி நடந்தால், நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், என்றார்.
ஆனால் அமெரிக்காவின் பதில் என்னவாக இருக்கும் என்பதைப் பகிரங்கமாகக் கூற மறுத்துவிட்ட அவர், தனது இரகசியங்களை வெளியிட முடியாது எனக் குறிப்பிட்டார்.




