Site icon Tamil News

செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் வேலைத்திட்டம் இந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், செவித்திறன் குறைபாடுள்ள 50 பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் இந்த வாரம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சுட்டிக்காட்டினார்.

“அந்த 50 பேரும் மிகவும் வெற்றிகரமாக வாகனங்களை ஓட்டினார்கள். விபத்துகள் ஏதும் ஏற்படவில்லை” என்றார்.

அதன்படி, இந்த வாரம் முதல் நாடு முழுவதும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கால்களை இழந்த இராணுவச் சிப்பாய்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மருத்துவ அறிக்கையைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது அந்த கால அவகாசம் 04 வருடங்கள் 08 வருடங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அழகியவண்ண தெரிவித்தார்.

Exit mobile version