கனடாவில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு; இந்திய இளைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார்
ஒன்ராறியோ பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டதும், பின்னர் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கில் இந்திய இளைஞர் ஒருவர் ஐந்தாவது நபராக கைதாகியுள்ளார்.
ஒன்ராறியோ பகுதியை சேர்ந்த Elnaz Hajtamiri கடத்தப்பட்டு, இதுவரை அவர் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற விவகாரத்தில் இதுவரை துப்புத்துலங்கவில்லை.இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் இறுதியில் Elnaz Hajtamiri மீது வாணலியால் தாக்கிய விவகாரத்தில், தற்போது 25 வயதான ஆகாஷ் ரானா என்பவர் கைதாகியுள்ளார்.
குறித்த சம்பவமானது அவர் தங்கியிருந்த ரிச்மண்ட் ஹில் நிலத்தடி பார்க்கிங் கேரேஜில் நடந்துள்ளது. இதில் Elnaz Hajtamiri பலத்த காயமடைந்ததுடன், வழிபோக்கர் ஒருவரே இச்சம்பவத்தில் தலையிட்டதாகவும், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மாயமானதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது கைதாகியுள்ள ரானா மீது பல பிரிவுகளில் பொலிஸார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும், Elnaz Hajtamiri-ன் முன்னாள் காதலர் உட்பட நால்வர் கொலை முயற்சி, கடத்தல் முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கை எதிர்கொள்கின்றனர்.மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் மேலும் எவரேனும் தொடர்புள்ளதாக பொதுமக்களுக்கு தெரியவந்தால், விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், Elnaz Hajtamiri கடத்தப்பட்ட வழக்கு இதுவரை முடிவுக்கு வராத நிலையில், அவர் தொடர்பில் எந்த உறுதியான தகவலும் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படவில்லை.2022 ஜனவரி 12ம் திகதி மூவர் குழு ஒன்று வலுக்கட்டாயமாக குடியிருப்புக்குள் நுழைந்து அவரை கடத்தி சென்றுள்ளது. ஆனால் இதுவரை பொலிசாரால் அவரை கண்டுபிடிக்கவும், கடத்திய அந்த மூவர் குழு தொடர்பில் உறுதியான தரவுகளை திரட்டவும் முடியாமல் போயுள்ளது.