கனடா வரலாற்றில் முதல் முறையாக மக்கள் தொகையில் ஏற்பட்ட மாற்றம்!
கனடாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாக தெரியவந்துள்ளதஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புதிய குடியிருப்பாளர்களில் 96 சதவீதமானோர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஓராண்டில் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கு மேல் வளர்ச்சிகண்டது கனடிய வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
சென்ற ஆண்டுமட்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 437,000 பேர் கனடாவில் குடியேறினர். இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் திகதி, கனடாவின் மொத்த மக்கள்தொகை சுமார் 39.5 மில்லியனை எட்டியது.
பொதுவாகப் பணக்கார நாடுகளில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்துவருகிறது. ஒப்புநோக்க, கனடாவில் அது ஆண்டுக்கு 2.7 சதவீதம்என்னும் விகிதத்தில் வேகமாய் வளர்கிறது.
இதே போக்கு நீடித்தால் இன்னும் 26 ஆண்டுகளில் கனடிய மக்கள்தொகை இரட்டிப்பாகும். பொருளியலின் முக்கியத்துறைகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைப் போக்க, வெளிநாட்டவர் குடியேற்றத்தைக் கனடா பெரிதும் ஊக்குவிக்கிறமை குறிப்பிடத்தக்கது.