இந்தியா

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது: ட்ரம்ப்!

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார்.

“எமது ஆட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் எரிசக்தி சார்ந்த ஏற்றுமதி செய்யும் தேசமாக உருவாகி வருகிறது.

கடந்த சில மாதங்களில் ஜப்பான், கொரியா, இந்தியா மற்றும் பல உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு நிலக்கரி சார்ந்த ஏற்றுமதியை அதிகரித்துள்ளோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்திருந்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகின்றது.

ஆரம்பக்கட்ட கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதால் இந்தியா மீதான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.

இரு நாடுகள் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் கூடுதல் சலுகைகள் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை செய்வதற்கு அமெரிக்கா இணங்கியுள்ளது.

அனைத்து அம்சங்களும் இறுதி செய்யப்பட்ட பின்பு வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையொழுத்தாகும் என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!