அந்த ஒரு வார்த்தையால் சரிகமபா மேடையை கலங்க வைத்த சபேசன்

zee தமிழ் என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் மிகப்பிரபல்யமான ஒரு நிகழ்ச்சிதான் “சரிகமபா”.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இசை நிகழ்ச்சிக்கு அனைவரும் அடிமைகள் தான்.
தற்போது zee தமிழ் சரிகமபா சீசன் 5 ஆரம்பிக்கப்பட்டு இறுதி தருணத்தை எட்டியுள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களை தெரிவு செய்யும் சுற்று நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
zee தமிழ் இந்திய கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் உலகளவில் திறமையுள்ள அனைவருக்கும் வாய்ப்பு வழங்குகின்றது.
குறிப்பாக ஈழத்து வாரிசுகள் சரிகமபா நிகழ்ச்சி மேடையை கலக்கி வருகின்றார்கள். அந்த வரிசையில் தற்போது zee தமிழ் மேடையை கனது பாடல்களால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தான் நம்ம சபேசன்.
பட்டம் முடித்து அரசுப்பணி தேடி வாழ்க்கை அமைத்து கொள்ளும் இந்த காலத்தில்,
தனது கனவுகளுக்காக இந்தியா சென்ற சபேசனுக்கு கிடைத்த மேடைதான்zee தமிழ் சரிகமபா நிகழ்ச்சி.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்தவர்தான் சபேசன்.
ஒவ்வொரு வாரமும் சக போட்டியாளர்களுக்கு கடும் சவால் விடும் போட்டியாளராக இருப்பவர் சபேசன். தற்போது இறுதி போட்டியாளர்களின் கதிரையில் அமர காத்திருக்கின்றார்.
கடந்த வாரம் இவருக்குத்தான் அந்த இறுதி போட்டியாளருக்கான கதிரை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது சற்றே மிஸ் ஆகி விட்டது.
சரி இம்முறையாவது கிடைக்குமா என்று காத்திருந்த சபேசனுக்கு இம்முறையும் அது சற்று தொலைவுக்குச் சென்றது.
இம்முறை 4 போட்டியாளர்களுக்கு கோல்டன் பர்ஃவோமன்ஸ் வழங்கப்பட்டது. இதனால் இவர்களில் யார் அந்த ஒருவர் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.
ஆனால் இம்முறையும் யாருக்கும் கிடைக்காமல் போனது. அடுத்த வாரம் தான் இனி பார்க்க முடியும். அதுவரை நாமும் சபேசனுடன் சேர்ந்து காத்திருக்கத்தான் வேண்டும்.
இந்த மேடையில் சபேன் அர்ச்சனாவிடம் கூறிய ஒரு வார்த்தையைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது.
“அந்த கதிரை என் அருகில்தான் உள்ளது. அது கிடைக்கும் வரை நான் எனது வீட்டுக்கு அழைப்பை எடுக்க மாட்டேன். அவர்களுடன் கதைக்க மாட்டேன். இறுதி போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் எனது வீட்டுக்கு கதைப்பேன்” என்றார். இதைய கேட்ட அனைவரும் சபேசனுக்காக ஒரு நொடி சோகத்தில் மூழ்கினர்.