ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழாவில் இலங்கை நட்சத்திரங்கள்
ஜீ தமிழ் என்றாலே சீரியல்களை விட ரியாலிட்டி ஷோக்கள், அதிலும், சரிகமப நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபல்யமானது.
இதில் குறிப்பாக ஈழத்து இளைஞர் யுவதிகளுக்கு முக்கிய இடத்தை சரிகமப வழங்குகின்றது.
அந்த வகையில் சரிகமப லிட்டில் சாம்ப் பட்டத்தை வென்ற யாழ்ப்பாணத்துச் சிறுமி கில்மிஷா ஜீ குடும்ப விருதுகள் விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதில் ஏராளமான போட்டியாளர்களும், வெற்றியாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“ஈழத்து இசைக்குயில் எனும் இசைக்கான மாபெரும் அடையாளத்தை சரிகமபா வாயிலாக எனக்கு வழங்கிய ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 2025 ஆம் ஆண்டுக்கான குடும்ப விருதுகள் வழங்கும் விழாவில் இசைக்குடும்பமாக மீண்டும் இணைந்து மகிழ்ந்த தருணம்” என குறிப்பிட்டு கில்மிஷா புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.







